பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடங்கியது: உலக பயனர்கள் அதிர்ச்சி.!

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியது.

இந்த அசாதாரண சூழ்நிலை 2 மணி நேரத்துக்கும் மேல் நிலவியதால், அனைத்து பயனர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

பேஸ்புக், வாட்ஸ், இன்ஸ்டாகிராம்:

இன்று உலகில் மிகவும் சக்தி வாய்ந்த சமூக வலைதளமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவை இருக்கின்றன.

மேலும் உலகின் எந்த ஒரு மூளையிலும் நடந்தாலும் அடுத்த வினாடியே சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.

 

பொது மக்கள் அடிமை:

இந்த சமூக வலைதளங்களுக்கு பொது மக்கள் பெரும்பாலும் அடிமையாகியுள்ளனர்.மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் சமூக வலைதளங்களில் கிடைக்கின்றன. மேலும், உலக மக்களுடன் நாம் தொடர்பும் கொள்ள முடிகின்றன.

 

2 மணி நேரம் முடக்கம்:

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று காலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி விட்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.

 

பயனர்கள் அதிர்ச்சி:

இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

சீரமைப்பு பணி:

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஒருமுறை இதுபோல ஏற்பட்ட செயலிழப்பு சீரடைய 24 மணி நேரம் வரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.