பாட்ஸ்.. 10 லட்சம் கணக்கு.. வார் ரூம்.. இந்திய தேர்தலுக்காக பேஸ்புக் வைத்திருக்கும் சூப்பர் திட்டம்

டெல்லி: இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அதிரடி திட்டம் ஒன்றை பேஸ்புக் செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் பேஸ்புக்கில் பொய்யான பதிவுகளின் எண்ணிக்கை திடீர் என்று அதிகமாகிவிடும். அதேபோல் பொய்யான கணக்குகளும் அதிகம் ஆகிவிடும். சமயங்களில் பாட்கள் எனப்படும் கணினிகளின் உதவியுடனும் கூட பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்ய முடியும்.

இதை கட்டுப்படுத்த பேஸ்புக் தனி டீம் ஒன்றை பல நாடுகளில் வைத்து இருக்கிறது. இந்த டீம்கள் தற்போது இந்திய தேர்தலுக்காக உழைத்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் தலையிட்டு உள்ளது என்று சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. அதிபர் டிரம்ப் தேர்தலில் நின்ற போது, அவருக்கு ஆதரவான கட்டுரைகளை பேஸ்புக் மக்களிடம் அதிகம் கொண்டு சென்றது. இதற்கு பின் ரஷ்யா வேலை பார்த்து இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது ஒரு வகையில் நிரூபிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

பேஸ்புக் உறுதிமொழி

இந்த நிலையில் பேஸ்புக் ஒரு உறுதிமொழி எடுத்தது. அதன்படி இனி எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் பேஸ்புக் கட்டுப்பாடுகளை விதிக்கும். பேஸ்புக்கில் முறையின்றி இயங்கும் கணக்குகள் முடக்கப்படும். தேர்தல் நேரத்தில் தவறான தகவல்களை பரப்பும் பொய்யான கணக்குகள், பக்கங்களை முடக்குவோம் என்று பேஸ்புக் கூறியது.

இந்திய தேர்தல்

தற்போது இந்த பேஸ்புக் குழு இந்திய தேர்தலிலும் தீவிரமாக உழைத்து வருகிறது. இந்திய லோக்சபா தேர்தலுக்கு பேஸ்புக் நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அதிரடி திட்டம் ஒன்றை பேஸ்புக் செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறது. இந்தியாவில் தேர்தலை முன்னிட்டு நிறைய பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது.

 

வார் ரூம்

இதற்காக கலிபோர்னியாவில் பெரிய வார் ரூம் ஒன்று இருக்கிறது. மற்ற நாட்டு தேர்தல்களை விட இந்திய தேர்தலுக்காக தற்போது அதிக பணியாளர்கள் அங்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 24 மணி நேரமும் பேஸ்புக்கில் இந்திய தேர்தல் தொடர்பாக போடப்படும் அனைத்து போஸ்டுகள், மீம்கள் எல்லாம் வரிசையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எப்படி செய்கிறார்கள்

இந்த வார் ரூமில் பெரிய அளவில் நிறைய டேட்டா திரைகள் உள்ளது. இதில் தவறான வார்த்தைகள் கொண்ட போஸ்டுகள், வெறுப்பை உமிழும் வார்த்தைகள் கொண்ட போஸ்டுகள், மீம்கள், வீடியோக்கள் மட்டும் வரும். இதை பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து தவறான போஸ்டுகளை நீக்குவார்கள். ஆம் எல்லா சர்ச்சைக்குரிய போஸ்டுகளையும் கண்காணித்து அதை நீக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீக்கம்

இதற்காக புதிய சாப்ட்வேர் பாட்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பாட்கள் மூலம் 10 லட்சம் பேஸ்புக் கணக்கில் சராசரியாக ஒரு நாளுக்கு நீக்கப்படுகிறது. ஆம் 10 லட்சம் பொய்யான கணக்குகள், வெறுப்புகளை உமிழும் கணக்குகள் தேர்தலை முன்னிட்டு நீக்கப்படுகிறது.

என்ன செய்கிறது

இதற்காக புதிய சாப்ட்வேர் பாட்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பாட்கள் மூலம் 10 லட்சம் பேஸ்புக் கணக்கில் சராசரியாக ஒரு நாளுக்கு நீக்கப்படுகிறது. ஆம் 10 லட்சம் பொய்யான கணக்குகள், வெறுப்புகளை உமிழும் கணக்குகள் தேர்தலை முன்னிட்டு நீக்கப்படுகிறது.

புதிதாக அமைக்க இருக்கிறார்கள்

இந்த நிலையில்தான் டெல்லி, கலிபோர்னியா போலவே இந்திய தேர்தலுக்காக சிங்கப்பூர், டூப்லின் ஆகிய இடங்களிலும் பேஸ்புக் வார் ரூம்களை கொண்டு வர இருக்கிறார்கள். இந்த வார் ரூம் குழு வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய ஆப்களிலும் பொய்யான செய்திகளை நீக்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.