தேர்தல் விளம்பரம் பேஸ்புக்கு ரூ.10கோடி வருமானம்: செலவில் பாஜ டாப்.!

இந்தியாவில் தேர்தல் திருவிழா 2019ம் துவங்க இருக்கின்றது. இது பாராளுமன்ற தேர்தலாகும் பல்வேறு கட்சிகளும், பொது மக்களை கவர்வதற்காக

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தேர்வு செய்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியில் பிடிக்க வேண்டும் என்பது பிரதான கட்சிகளின் நோக்கமாகும்.

பேஸ்புக்கு வருமானம் ரூ.10 கோடி:

இந்தியாவில் தேர்தலையொட்டி முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களின் மூலம் அந்த நிறுவனம், 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

200 மில்லியன் பயனர்கள்:

இந்தியாவில் 200 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள முகநூல் நிறுவனம், தமது தளத்தில் வெளியாகும் அரசியல் விளம்பரங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதென முடிவு செய்துள்ளது.

ரூ. 8.58 கோடி வருமானம்:

அந்த வகையில் தேர்தல் விளம்பரங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த வார விவரப்படி 41 ஆயிரத்து 974 விளம்பரங்கள் பகிரப்பட்டதாகவும், அதன் மூலம் 8.58 கோடி ரூபாய் வருவாய் வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

 

ரூ. 10.32 கோடி வருமானம்:

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மொத்தமாக 51 ஆயிரத்து 810 விளம்பரங்கள் மூலம், 10.32 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

பாஜ முன்னிலை:

தேர்தல் குறித்த விளம்பரங்களை பகிர்வதில் பாஜகவினர் முன்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ள முகநூல் நிறுவனம், பாஜக வின் 3,700 விளம்பரங்களின் மூலம் 2.23 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.