ஒரேநாளில் வேலை செய்யாமல் போன பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. உலகம் முழுக்க டவுன்.. என்ன காரணம்?

நேற்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவை வேலை செய்யாமல் பிரச்சனை செய்துள்ளது.

சென்னை: நேற்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவை வேலை செய்யாமல் பிரச்சனை செய்துள்ளது. இந்தியாவிலும் இந்த பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுக்கு பேஸ்புக் எடுக்கவில்லை, எதையும் போஸ்ட் செய்ய முடியவில்லை.. அட எங்களுக்கு இன்ஸ்டாகிராம் எடுக்கவில்லை, போட்டோ லோட் ஆகிக்கொண்டு இருக்கிறது. போங்க பாஸ் எனக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் கூட செய்ய முடியவில்லை, இதுதான் நேற்று உலகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் பேசிய வசனம்.

நேற்று உலகம் முழுக்க ஒரே நாளில் இந்த மூன்று முக்கிய ஆப்கள் செயலிழந்து போய் இருக்கிறது. சில மணி நேரங்கள் இந்த ஆப்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்துள்ளது.

என்ன நடந்தது

பேஸ்புக் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமை வாங்கியது. அதன்பின் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. இதன் மூலம் சோசியல் மீடியா உலகில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டராகிராம் பெரிய ஜாம்பவான்களாக இருக்கிறது. இது எல்லாம் தற்போது பேஸ்புக் குடும்பத்தை சேர்ந்த நிறுவனங்கள் ஆகும்.

வேலை செய்யவில்லை

இந்த நிலையில் நேற்று இந்த மூன்று ஆப்களும் வேலை செய்யாமல் போனது. இந்தியாவில் மதியமும், பின் இரவில் சில மணி நேரமும், பிரான்ஸ், அமெரிக்கா, ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா, தெற்காசியாவில் பல நாடுகள், என்று நிறைய இடங்களில் இந்த மூன்று ஆப்களும் வேலை செய்யாமல் முடங்கி இருக்கிறது. நீண்ட நேரம் இந்த பிரச்சனை நீடித்தது.

எந்த ஆப் எல்லாம் இயங்கவில்லை

பின்வரும் ஆப்கள் எல்லாம் நேற்று தொடர்ந்து 8 மணி நேரமாக இயங்காமல் முடங்கி இருந்தது.

பேஸ்புக்
வாட்ஸ் ஆப்
டிவிட்டர்
பேஸ்புக் மெசேஞ்சர்
பேஸ்புக் லைட் ரக ஆப்கள்
விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனமான Oculus (பேஸ்புக் வாங்கிவிட்டது) ஆகியவை செயல்படவில்லை.

போஸ்ட் செய்தது

இந்த பேஸ்புக் குடும்ப ஆப்கள் வேலை செய்யாமல் போனது மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய பேஸ்புக் நிறுவனம், நேராக பங்காளி டிவிட்டர் ஆப்பில் வந்து ''பேஸ்புக் முடங்கிவிட்டது மன்னிக்கவும், நாங்கள் சரி செய்து கொண்டு இருக்கிறோம்'' என்று போஸ்ட் செய்தது. இன்ஸ்டாவும் இதே போல போஸ்ட் செய்து மக்களை சமாதானம் செய்தது.

காரணம் என்ன

இந்த மூன்று நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட பிரச்சனைதான், இந்த டவுனிற்கு காரணம் என்று கூறுகிறார்கள். இந்த மூன்றின் தலைமை நெட்வொர்க் மற்றும் சர்வர்களில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்வதற்குள் இந்த டவுன் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இந்த மூன்று ஆப்களிலும் சமீப காலமாக இந்த பிரச்சனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் மோசம்

முக்கியமாக பேஸ்புக் நிறுவனம் இந்த ஆப்களை வாங்கிய பின் இந்த பிரச்சனை அடிக்கடி நடந்து வருகிறது. வாட்ஸ் ஆப் அடிக்கடி தாறுமாறாக கிராஷ் ஆகிறது. ஆனாலும் பேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு முறையும் இதை ''பராமரிப்பு பணி நடக்கிறது'' என்று கூறி சப்பைக்கட்டு கட்டுவது குறிப்பிடத்தக்கது.