ரூ.398க்கு இலவச வாய்ஸ் கால், கூடுதல் டேட்டா அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இலவசமாக வாய்ஸ் கால்களையும், கூடுதல் டேட்டாக்களையும் நாம் அனுபவிக்க முடியும்.

இந்த பிளான் ரூ 398க்கு ஏர்டெல் நிறுவனம் வழங்குகின்றது. இதில் இதில் நமக்கு கிடைக்கும் பலன்களை இது குறித்து காணலாம்.

ஜியோ வருகை:

இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்தது. இதன் பிறகு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டது.

மேலும், குறுகிய காலத்தில் இந்தியாவில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகவும் ஜியோ வளர்ந்தது.

 

மற்ற நிறுவனங்களுக்கு நஷ்டம்:

ஜியோ நிறுவனம் வளர்ந்ததாலும், சலுகைகளை வாரி வழங்கியதாலும், ஏர்டெல், ஐடியா, வோடபோன், ரிலையன்ஸ், ஏர்டெல், உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கின. இந்நிலையில் ஏர்செல், ரிலையன்ஸ் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தால் மூடுவிழா கண்டன.

 

நஷ்டத்தை ஈடுகட்ட முடிவு:

நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.34 குறைந்த ரீசார்ஜ் என்று நிறுவனங்கள் வரையறை செய்துள்ளன. ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு சலுகைளையும் அறிவித்து வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துள்ளன.

 

ரூ.389 பிளான் அறிவித்த ஏர்டெல்:

ரு; 398க்கு புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. மொத்தமாக 105 ஜிபி டேட்டா வழங்குகின்றது. 70 நாட்களுக்கு வேலிட்டி மற்றுமு; இலவவ வாய்ஸ் கால்ஸ் சேவையும் வழங்கப்படுகின்றது.

 

எஸ்எம்எஸ் இலவசம்:

இதில் மற்ற ரீசார்ஜ் பிளான்களுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றது. தற்போது இந்த பிளானில் 90 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றது.

 

முந்தைய பிளான் :

இந்த ரீசார்ஜ் பிளானுக்கு முன் ஏர்டெல் அறிமுகம் செய்த ரூ399 பிளான் 84 நாட்கள் வேலிட்டி, தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் இலவச வாய்ஸ் கால்ஸ் சேவைகளையும் வழங்குகின்றது.

 

புதிய பிளானில் இல்லை:

இதை விட புதிதாக அமல்படுத்திய ரீசார்ஜ் பிளான் ஒரு ரூபாய் மட்டும் விலை குறைந்துள்ளது. தினமும் 0.5 ஜிபி மட்டும் கூடுதலாக கிடைத்தாலும், வேலிட்டி 70 நாள். இந்த பிளானை வாடிக்கையாளர்கள் எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்று பார்க்க வேண்டும்.