டிக்டாக் (செயலி) நிறுவனத்திற்கு ரூ.40 கோடி அபராதம்: எதற்கு தெரியுமா?

உலகம் முழுவதும் டிக்டாக் செயலியை அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும. மேலும் இந்த டிக்டாக் செயலி வாட்ஸ்ஆப், டிவிட்டர் போன்று அதிகளவில் பிரபலமானது ஆகும்.

டிக்டாக் செயலியை பயன்படுத்தி ஒரு பாடலையோ அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற்போல் நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை செய்யலாம். மேலும் இந்த செயலி மூலம் மக்கள் அதிகளவில் க்களை வெளியிடுகின்றனர்.

இந்த செயலி ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்றால் கூட, இதற்கும் அதிக மக்கள் அடிமையாகி வருகின்றனர்,குறிப்பாக ஆபாசமான க்கள் பலவும் இதில் உலாவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தடை செய்யவேண்டும்

டிக்டாக் செயலி சீன நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பின்பு இந்த செயலியை தடை செய்யவேண்டும்
என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன, குறிப்பாக தமிழகத்திலும் டிக்டாக் செயலி தடை செய்யவேண்டும் என
அமைச்சர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

புதிய சர்ச்சை

இந்நிலையில் டிக்டாக் செயலி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது, அது என்னவென்றால் அமெரிக்காவில் உள்ள குழுந்தைகளின் ரகசிய தவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் செயலி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

 

அமெரிக்கா

அமெரிக்காவில் 13வயதுகுட்பட்ட சிறுவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரத்தை சேகரிக்கும் போது அவரவர்களின் பெற்றோர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும். ஆனால் அந்த விதியை டிக்டாக் செயலி கடைபிடிக்கவில்லை என்றும் விதியை மீறி குழந்தைகளின் தகவல்களை திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் தலைமை
வர்த்தக ஆணையம் டிக்டாக் செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40கோடி ரூபையை அபராதமாக விதித்துள்ளது.

 

புதிய செயலி

மேலும் டிக்டாக் நிறுவனம் சார்பில் தற்சமயம் அறிக்கை வெளியடப்பட்டுள்ளது, அது என்னவென்றால் 13வயதுக்குட்பட்டவர்களுக்காக பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் வசதியோடு புதிய செயலி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிடிஎச்,கேபிளை தொடர்ந்து இன்டெர்நெட் காலிங் அம்சத்திற்கும் புதிய விதிமுறைகள்: டிராய்.!

டிராய்( தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு கேபிள் மற்றும் டிடிஎச் விலைகளில் பல்வேறு புதிய விதிமுறைகளை கொண்டுவந்தது. இந்த புதிய விதிமுறை கடந்த மாதம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trai Channel Selector App User Guideline என்ற இந்த அப்ளிகேசன் டிராய் இணையதளத்தில் கிடைக்கிறது, பின்பு இதன் மூலம் தங்களுக்கு பிடித்த சேனல்களுக்கான முறையான கட்டணம் என்ன என்பதை மிக தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

 

ஓவர்-தி-டாப்

கேபிள் மற்றும் டிடிஎச் விதிமுறைகள் மக்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். மேலும் டிராய் விதிமுறைகளை பின்பற்ற மார்ச் 31-ம் தேதி கால அவகாசம் அளித்திருக்கும் டிராய் இப்போது ஓவர்-தி-டாப் (ott) சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரும் விதிமுறைகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

 

ஆர்.எஸ்.சர்மா

மேலும் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவில் தற்போது நடந்து வரும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் தான் ஓவர்-தி-டாப் பற்றிய அறிவிப்பை டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார்.

 

விரைவில்

டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தது என்னவென்றால் OTT சேவைகளுக்கான புதிய திட்டங்களுக்கான மாதிரி இப்போதே எங்களிடம் உள்ளது. விரைவில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரைகளுடன் உங்களைச் சந்திப்போம்'' என்றார்.

 

இன்டர்நெட் காலிங், மெசேஜிங்

குறிப்பாக உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் 5ஜி தொழில்நுட்பத்தால் எந்த மாதிரி சேவைகள் மாறும் என எடுத்துக்காட்டி வருகிறது. மேலும் OTT குறித்த இந்தப் புதிய விதிமுறைகள் இன்டர்நெட் காலிங், மெசேஜிங் போன்றவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.