விரைவில்: கிளியர் ஹிஸ்டரி ஆப்ஷனை கொண்டுவரும் பேஸ்புக்.!

பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இந்த பேஸ்புக் செயலியை உலகம் முழுவதும் 200கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெறும் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வியாபார சந்தையாக பேஸ்புக் உள்ளது.

சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பேஸ்புக் வாயிலாக தங்கள் நிறவன பொருட்களுக்கு அதிகமாக விளம்பரம் கொடுக்கின்றனர். அதனால் தான் பேஸ்புக்கில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்தாலோ அது நம்மை

துரத்திக்கொண்டே இருக்கும்.

ஹிஸ்டரி

பின்பு பேஸ்புக்கில் எந்தப் பக்கத்துக்கு சென்றாலும் நாம் தேடிய பொருளின் விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும், இதற்குகாரணம் நாம் பேஸ்புக்கில் செய்யும் ஒவ்வொரு தேடலும் ஒரு ஹிஸ்டரி போல பதிவாகும்.

மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்கள்

இந்த ஹிஸ்டரி பதிவுகளை வைத்து மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்கள் நம்மை குறி வைக்கின்றன, இது ஒரு விளம்பர
உத்தி என்றாலும். நாம் தேடுவதையும, நம்முடைய ஒவ்வொரு க்ளிக்கையும் கூட பேஸ்புக் கண்காணிப்பது ஏற்கத்தக்கதல்ல 
என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

 

கிளயர் ஹிஸ்டரி

அதன்படி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த அனைவரின் குற்றச்சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிளயர் ஹிஸ்டரி ஆப்ஷனை கொண்டு வர பேஸ்புக் முடிவு செய்துள்ளது.


தகவல்கள் அழிந்துவிடும்

மேலும் கிளியர் ஹிஸ்டரி ஆப்ஷன் மூலம் மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களுக்கும், இணையபக்கங்களுக்கும் உங்களின் தகவல்களை சேர்த்து வைக்கமுடியாது என்றும்,ஒருமுறை உங்களது ஹிஸ்டரி டெலிட் செய்யப்பட்டால் சேமிக்கப்பட்ட தகவல்கள் அழிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செட்டிங்ஸ்

பின்பு இந்த புதிய செட்டிங்ஸ் விரைவில் நடைமுறைக்கு வரும் என அந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி 
தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.