இன்று முதல் விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் : டிராய் அதிரடி.!

இன்று முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் டி.வி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை மட்டும் கட்டணம் அளித்து பார்க்கும் புதிய கட்டணமுறை நடைமுறைக்கு வருகிறது. இப்போது கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறையால் 17கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எந்தவிதமான இடையூறையும் சந்திக்கமாட்டார்கள் என டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

 

குறிப்பாக கேபிள் அல்லது டிடிஎச் மூலம் சில சேனல்கள் தொகுப்பாக வழங்கப்படுகின்றன, அதில் நமக்கு தேவைப்படாத குறிப்பிட்ட சேனல்கள் இருந்தாலும் அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்துகிறோம். இந்நிலையில் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே பணம் செலுத்தி பார்க்கும் முறை அமல்படுத்தப்படும் என டிராய் ஏற்கனவே அறிவித்திருந்தது, தற்சமயம் அது நடைமுறைக்கு வந்துள்ளது.

விருப்பமான சேனல்கள்

மக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்கள் பட்டியலை கேபிள் டிவி சேவை அல்லது டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனத்திடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் வழங்குமாறு அறிவித்திருந்தது, அதன்படி ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்சம் 100 சேனல்களை தேர்வுசெய்ய வேண்டும், இதற்கு ரூ.153.40 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

100சேனல்கள்

இந்த 100சேனல்கள் இலவச சேனல்களாகவோ கட்டண சேனல்களாகவோ இருக்காலம், அதேநேரம் இந்த குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் எச்டி தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது.

 

டிடிஎச்

டிடிஎச் ஆப்ரேட்டர்கள் இதற்குமுன் ப்ரீபெய்ட் மாடலில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையை அளித்துவந்தனர். ஆனால், புதிய கட்டண விதிமுறையின் கீழ் வாடிக்கையாளர்கள் கேட்கும் விஷயங்களை அளிக்க வேண்டும்.பின்பு டிடிஎச் சேவைதாரர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இருக்காது. கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு இடையூறு இன்றி சேவை கிடைக்கத் தற்காலிகமாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய விதிமுறை

இப்போது தெரிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் படி வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களுக்கு மட்டும் பணம் கொடுத்துப் பார்க்கலாம் எனவும், அதேசமயம் இலவசமாக வரும் 100சேனல்களுக்கு கட்டணமாக 130 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். பின்பு ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக ரூ.19-க்கு மேல் கட்டணமும் வசூலிக்கக் 
கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.