ட்ரூகாலர் வசதியை மேசேஜஸ் செயலியில் கொண்டு வந்தது கூகுள்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இப்போது கூகுளின் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று ஸ்பேம்

என்ற குறுந்தவகல்களை கண்டறியும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய அம்சம் மெசேஜஸ் செயலி பயன்படுத்தும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது

கூகுள் நிறுவனம்.

மெசேஜஸ்

பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது, இந்நிலையில் புதிய அம்சம் சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

செட்டிங்ஸ்

இப்போது சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் நோட்டிபிகேஷன் வடிவில் உள்ளது, மேலும் புதிய ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் - அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் 
-ஸ்பேம் ப்ரோடெக்ஷன் -எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும்.

 

குறுந்தகவல்

இந்த செட்டிங்ஸ்-ஐ செயல்படுத்தினால் உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும். பின்பு இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்றால், முதலில் செயலிக்கு வரும் குறுந்தகவல்களின்
சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும், எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் படிக்கப்படாது.

 

தெளிவான விவரங்கள்

மேலும் ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.எனினும், ஸ்பேம் அறிக்கையில் குறிப்பிட்ட குறுந்தகவல் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறுந்தகவலை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.