விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்! புதிய தொலைதூர கிரகத்தை கண்டறிந்த வானியல் ஆய்வாளர்கள்..

நமது சூர்ய குடும்பத்தில் புதிய குட்டி கிரகத்தை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும், இதுவரை கண்டறிந்ததிலேயே இது தான் மிகவும் தொலைதூரத்தில் உள்ளது எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

" நான் இதை கண்டறிந்த போது 'மிகவும் அப்பால்' என நான் கூறினேன். ஆம் இது சூர்யகுடும்பத்தின் மிக மிக தொலைவில் உள்ள கிரகம் ஆகும்" என்கிறார் கார்னேஜ் இன்ஸ்டியூசன் ஆப் சயின்ஸ்-ஐ சேர்ந்த வானியல் அறிஞர் ஸ்காட் செப்பர்டு.

குட்டி கிரகம்

2018VG18 என அழைக்கப்பட்ட இந்த குட்டி கிரகம் ,பின்னர் இதனை கண்டறிந்த குழுவால் "பார்அவுட்"(Farout) செல்லமாக பெயரிடப்பட்டது. 18 பில்லியன் கிலோமீட்டர்(11.2 பில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ள இந்த கிரகம், புளோட்டோவை காட்டிலும் 3.5மடங்கு அப்பால் உள்ளது. இது சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான தொலைவை காட்டிலும் 100 மடங்கு அதிகம் மற்றும் நாசாவால் 1977ல் செலுத்தப்பட்டு இந்த மாதம் விண்மீன் விண்வெளியை அடைந்த வயோகர்2 ன் ஒரே தொலைவு ஆகும்.

நவம்பர்10

நவம்பர்10 அன்று ஹவாயில், ஜப்பானின் சுபரு டெலஸ்கோப் மூலம் செப்பர்டு மற்றும் அவரது சக பணியாளர்களால் பார்அவுட் கண்டறியப்பட்டதாக கார்னேஸ் அறிவியல் நிறுவன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் பார்அவுட் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருந்துள்ளது. ஆனால் அறிவியல் ஆர்வத்தை தூண்டக்கூடிய இதிலுள்ள அம்சம் என்னவெனில் வழக்கத்திற்கு மாறான சுற்றுவட்டப்பாதை. இதன் அசாதாரணமான கோணங்கள், டிரான்ஸ் நெப்டியூனியன் கோள்களை ஒத்து உள்ளன.

 

பிரபலமான விளக்கம்

இந்த வான் கோள்களின் அசாதாரண சுற்றுவட்டப்பாதை எதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் என சமீப ஆண்டுகளில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.

அவற்றில் மிக பிரபலமான விளக்கம், ஒன்பதாவது அல்லது பத்தாவது கிரகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதுதான். உண்மையில், வானியல் அறிஞர்கள் 9வது கிரகத்தை கண்டறியும் முயற்சியில் இருந்தபோது தான் பார்அவுட்-ஐ கண்டறிந்துள்ளனர்.

 

ஈர்ப்புவிசை

சமீபத்திய தரவுகளின் படி, ஒரே ஈர்ப்புவிசையை கொண்ட ஒரு குழுவாக இந்த கிரகம் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் பார்அவுட் பற்றிய சில தகவல்களை நம்மால் சேகரிக்கமுடிந்தது. பார்அவுட்டின் சுற்றளவு 500கிலோமீட்டர்(310மைல்கள்) இருக்கலாம் எனவும், இது சூரியனை சுற்றிவர 1000 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆகும் எனவும், இது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

டிஜிட்டல் கேமராக்கள்

"உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகள் சிலவற்றில் உள்ள பரந்த டிஜிட்டல் கேமராக்கள் மூலம், ப்ளூட்டோவிற்கு அப்பால் உள்ள சூர்யகுடும்ப எல்லைகளை ஆராய்ந்து வருகிறோம்" என்கிறார் நார்தன் அரிசோனா பல்கலைகழகத்தின் வானியல் அறிஞர் சாடு ட்ருஜிலோ.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் மற்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் கோள்களை தொடர்ந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து வருகின்றனர் என தெரிகிறது. இன்னமும் நம் சூர்யகுடும்பத்தில் கண்டுபிடிக்கப்படாத ஏராளமான கோள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.