ஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதல் டேட்டா அறிவிப்பு.!

இந்தியாவில் தினசரி டெலிகாம் நிறுவனங்கள் புதிய திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். பின்பு ஏர்டெல் நிறுவனம் சார்பில் தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ199 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு 1.4ஜிபி டேட்டா மற்றும் இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் கிடைத்தது, தற்சமயம் இந்த திட்டத்தில் 2.8ஜிபி டேட்டாவை வழங்கியுள்ளது அந்நிறுவனம்.

இந்த கூடுதல் டேட்டா திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் ஏர்டெல் நிறுவனம் இன்று 169 பரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகளும்வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன்பு ஏர்டெல் அறிவித்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் இப்போது ரூ.289/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் ரூ.289/- ப்ரீபெயிட் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 48நாட்களுக்கு வழங்கப்படுகிறது, குறிப்பாக இலவச கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் ரூ.289 திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

 

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் இன்று ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு பயன்படுத்த முடியும் 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி 90எஸ்எமஎஸ், ரோமிங், இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில்
வழங்கப்படுகின்றன. பின்பு இதற்கு முன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

 

ஏர்டெல் ரூ.419 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.419 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 75 நாட்களுக்கு 
வழங்கப்படுகிறது, மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

 

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் 
ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு
வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.