கட்டிப் பிடி வைத்தியத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் கல்லா கட்டும் புதிய ஸ்டார்ட் அப்

நல்லா நெருக்கமா படுங்க... உங்க உடம்போடு சூடு இன்னொருத்தர் உணரணும்... அந்த அளவுக்கு நல்ல இருக்கமா... நெருங்கி... கட்டிப் பிடிச்சிக்கிட்டே படுங்க..! என்கிறார் 34 வயது சமந்தா ஹெஸ். இந்த நான்கு வரியைப் படித்து விட்டு சமந்தாவை தவறாக நினைக்க வேண்டாம். அவர் ஒரு தெரபிஸ்ட். CUDDLE தெரபிஸ்ட். Cuddle Up To Me என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

கட்டிப் பிடி வைத்தியத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் கல்லா கட்டும் புதிய ஸ்டார்ட் அப்

Third party image reference

சமந்தா ஹெஸ்-க்கும் வாழ்கை போராகத் தான் போய்க் கொண்டிருந்தது. எதோ உப்புமா செக்யூரிட்டி கம்பெனியில் இன்ஸ்டாலேஷன் மேலாளர். பள்ளித் தோழனையே கல்யாணம் செய்து கை கழுவிய அமெரிக்கப் பெண். செம கடுப்பான வாழ்கை. ஆயிரக் கணக்கான நண்பர்கள் ஆனால் உணர்வைப் பகிர, அன்பை அள்ளிக் கொடுக்க, ஆனந்தத்தைத் தெளிக்க ஆள் இல்லை.

Third party image reference

 

அந்த நேரத்தில் "2 டாலருக்கு ஒரு டீலக்ஸ் ஹக் (கட்டிப் பிடித்தல்) " என ஒரு விளம்பரம். புரிந்து விட்டது. தனக்கு ஏற்பட்ட வெற்றிடம் நிறைய அமெரிக்கர்களுக்கு இருப்பதை கட்டுரையின் முடிவில் உணர்ந்தார். அதே நினைப்பில் இரவு கடுமையாக நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டிப் பிடிக்கிறார். தன்னையும் மீறி அழுகை பீறிடுகிறது. அந்த நோய்வாய்ப்பட்ட பெண்ணின் கண்களிலும் நீர் வழிகிறது. இந்த நொடி உலகமே அன்பு மயமாகத் தெரிகிறது.

எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும் போது அந்த நோய்வாய்ப்பட்ட பெண் "என்னை இத்தனை அன்போடு கட்டிப் பிடித்த கடைசி நபர் என் கணவர் தான். அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. நாளையும் வருவாயா... என்னை இதே அன்போடு கட்டி அணைப்பாயா..? என முட்டி போட்டு ரோஸ் கொடுக்காத குறையாக கேட்டிருக்கிறார். சமந்தாவுக்கு கண்ணங்கள், காது மடல்கள் எல்லாம் சிவந்து விட்டு. மீண்டும் கண்களில் வைரத் துளிகள் பெருக்கெடுத்து மின்னுகின்றன. நிச்சயம் வருவென் என்கிறார்.

Third party image reference

 

உலகில் அன்புக்கு இத்தனை பஞ்சமா..? ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு எப்படி அன்பைப் பரிமாறிக் கொள்வது.

அடுத்த நாள் தன் 500 டாலர் பணம் செலுத்தி Cuddle Up To Me நிறுவனத்தை பதிவு செய்கிறார். அன்புக்கு விலை கிடையாது. ஆனால் என்னை நான் தற்காத்துக் கொள்ள இந்த விலை அவசியம். இலவசங்கள் என் மீதான சமூக மதிப்பிட்டை குறைத்துவிடலாம். ஆக என் அன்பை வெளிப்படுத்த, மற்றவர்களின் அனபிப் பெற ஒரு கடை வைத்து, விலை பேசி அன்பு பரிமாறத் தொடங்கினாள் சமந்தா ஹெஸ்.

Third party image reference

 

 

இப்படி பல பிரச்னைகளைத் தாண்டி ஒரு நல்ல அலுவலக இடத்தை தேர்ந்தெடுக்க, அதுவும் கட்டிப் பிடி தொழில் செய்ய முழுதாக 9 மாதங்கள் அலைந்தாள். ஒரு மணி நேரத்துக்கு 40 டாலர் என கட்டிப் பிடித்து அன்பைப் பரிமாறினாள். சமந்தாவுக்கு, அந்த வயதான பாட்டியைக் கட்டிப் பிடிக்கும் போது கிடைத்த அன்பு மிகுதியான ஒரு மன நிலை வெகு சில ஆண் அல்லது பெண்களோடு மட்டும் தான் கிடைத்தது. இயந்திரத் தனமாக கட்டிப் பிடிப்பதற்கு பதில் பேசிப்புரிய வைக்க ஒரு தனி நேரத்தை ஒதுக்கினாள். ஆக ஒரு மணி நேர கட்டிப் பிடி வைத்தியத்துக்கு 30 நிமிட கன்சல்டிங்.

Third party image reference

 

இனியும் ஒற்றை ஆளாக வரும் வாடிக்கையாளர்களை கவனிக்க முடியாது என தன்னைப் போன்ற நிறைய அன்பு கொண்ட ஆண் மற்றும் பெண்களை தேர்வு செய்தாள். நிறைய பயிற்சிக்குப் பின் அவர்களும் சமந்தாவைப் போல அன்பை பரிமாறப் பழகினர். இப்போது ஆறு கட்டிப் பிடி அறைகள் உடன் Cuddle up to me விரிவடைந்திருக்கிறது.

Third party image reference

 

Cuddler ஆக விரும்பினால் ஆன்லைனில் 300 டாலர் கட்டணம் செலுத்தி பாடங்களைப் படித்துத் தேற வேண்டும். நேரடியாக வந்து பாடம் படிக்க ஒரு நபருக்கு 3200 டாலர். அதன் பின் 250 மணி நேர கட்டிப் பிடித்தல் அவ்வளவு தான் நீங்களும் ஒரு Professional Cuddler.

Third party image reference

 

சமந்தா ஹெஸ்-ன் இந்த பிசினஸை அமெரிக்காஸ் காட் டேலண்ட் தொடங்கி உள்ளூர் பத்திரிகைகள் வரை பலரும் பேட்டி கண்டிருக்கிறார்கள். எல்லா பேட்டிகளிலும் சமந்தா ஒரு பிசினஸ் பெண்ணாக கம்பீரப் பேட்டி கொடுப்பதற்கு பதில்... அன்பில் உயர்ந்த மனிதனாகவே பேட்டி கொடுக்கிறார். பேட்டியாளரையும் அன்போடு 45 நொடிகள் கட்டி அணைக்கிறார்.

Third party image reference

 

கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் 90,000 டாலர் வரை சம்பாதித்திருக்கிறார். அதை விட ஸ்டார்ட் அப்களில் பெரிய விஷயம் ஐந்து ஆண்டுகளாக பிசினஸ் செய்வது தான். அந்த மைல்கல்லையும் எட்டி இருக்கிறார். ஆனால் ஒரு பெரிய தவறை சமந்தா செய்திருக்கிறார். முதலீடுகள். இன்வெஸ்ட்மெண்ட் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நிறுவும் போது 40,000 டாலரை ஒரு நபரிடம் இருந்து வாங்கினார். இப்போது இந்த நிறுவனத்தின் மொத்த லாபத்தில் ஆண்டுக்கு 40% அந்த முதலீட்டாளருக்குச் சென்றுவிடுகிறதாம்.