ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையளர்களை நீக்க ஏர்டெல், வோடபோன், ஐடியா திட்டம்.!

டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் அன்மையில் டெலிகாம் நிறுவனங்கள் குறைந்த விலையில் பல்வேறு புதிய சலுகைகளையும் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க திட்டமிட்டுள்ளன. இருந்தபோதிலும் ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் எப்போதும் தனது மற்றும் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை கவரும் புதிய சலுகைகளை அறிவத்து வருகிறது என்று தான் கூறவேண்டும்.

ஜியோ

மேலும் ஜியோ வந்தபின்பு ஸ்மார்ட்போன்களில் இரண்டாம் சிம் ஆக ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களில் சிம் கார்டை தான் மக்கள் அதிகமாக உபயோகம் செய்து வருகின்றனர். குறிப்பாக இன்கம்மிங்க வசதிக்காக மட்டுமே இது
போன் நெட்வொர்கை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏர்டெல்

இப்போது முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் மாதம் குறைந்தது 35ரூபாய் கூட ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் 100 மில்லியள் வாடிக்கையாளர்களை நீக்க உள்ளது என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 

150 மில்லியன்

இதேபோன்று ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கம் செய்யப்போவதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ள சந்தாதார்கள் அனைவரும் 2ஜி வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏர்டெல்லின் ராஜதந்திரம் :

ஏர்டெல்லின் ராஜதந்திரம் என்னவென்றால் சுமார் சுமார் 100 மல்லியன் மக்கள் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யாமல் ரூ.10-க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர், இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு 1,200கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. மேலும் அந்ந 100மில்லியன் மக்கள் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்திற்கு 2,100 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.

 

வோடபோன் மற்றும் ஐடியா:

வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் இதேபோன்று 35 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும்
வாடிக்கையாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. பின்பு இந்நிறுவனங்களும் அதிக லாபங்களுக்கு வேண்டி பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது.