மூனுக்கு பக்கத்துல மூன்மூன்.! பூமி போல இருந்தா சூப்பர் எர்த்.!

இந்து புராணங்களிலும், இதிகாசங்களிலும் பூமியை போல வான் வெளியிலும், பூமிக்கு கீழே பூமி போன்றும் இருப்பதாக கூறி வருகின்றது.

மேலும், மேலே பூமியை போல ஏராளமான பூமிகள் இருப்பதாகவும் அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக மேலோக்கி சென்று வருவதாகவும் எல்லாம் கூறப்படுகின்றது.

இதை எல்லாம் நாம் கட்டுக் கதையாக எண்ணி வந்தோம். தற்போது அறிவியல் ரீதியாகவும் அங்கு பூமியை போலவும், சூரியக் குடும்பத்தை போலவும் மற்ற கிரகங்களும் தற்போது விஞ்ஞானி ரீதியாகவும் நிருபிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சூரியக் குடும்பத்துக் வெளியே அதுவும் அருகே பூமியை போல மற்றொரு கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்பிடித்துள்ளனர்.

தற்போது தான் நிலாவுக்கு அருகே மூன் மூன் என்று கண்டுபிடித்தார்கள் விஞ்ஞானிகள்.இந்நிலையில் பூமியை போல மற்றொரு பூமியையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

சூரியன்:

சூரிய குடும்பத்துக்கு சூரியனே தலைவன். சூரியன் இருப்பதால் தான் மற்ற கிரங்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. மேலும் சூரியனினில் அணுக்கரு பிளவு ஏற்பட்டு அதிலிருந்து வெடித்து சிதறியதால் , மற்ற கிரகங்கள் தோன்றியதாக கூறப்படுகின்றது.

தற்போது வரை எத்தனை சூரியன்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. லட்சக்கணக்கில் சூரிய குடும்பங்களும், நட்சத்திரங்களும் இருப்பதாக கூறப்படுகின்றன.

 

குடும்பத்துக்கு தலைவன் சூரியன்:

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுக்கு தலைவன் சூரியன். சூரியை சுற்றியே மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன. புதன், வெள்ளி, புவி, செவ்வாய் , வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் . மேலும் சில கிரகங்களும் இருக்கின்றன.

 

மூன் மூன் கண்டுபிடிப்பு:

கடந்த சில நாட்களுக்கு முன் நிலவுக்கு மூன்மூன் என்று கண்டுபிடித்தார்கள். சந்திரனின் துணை நிலவுகளை மூன்மூன்ஸ் (moonmoons), மூனிடோஸ் (moonitos), மூன்நெட்ஸ் (moonettes), மற்றும் மூன்ஸ் (moooons) என்ற பெயர்களை கொண்ட அழைக்கலாம்.

 

பூமியை போல பூமி:

6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள barnard's நட்சத்திரத்தை அமெரிக்காவின் சாண்டா க்ரூஸ் ((Santa Cruz)) விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றி வருவதையும், அது பூமியைப் போன்று இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அது மங்கலாக காட்சி அளிப்பதுடன், பூமியை விட 3.2 மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

மைனஸ் 170 டிகிரி செல்சியஸ்:

இந்த கிரகமானது, barnard's நட்சத்திரத்தை சுற்றி வர 233 நாட்கள் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய வெப்ப ஆற்றலை இதுபெறாத காரணத்தால் மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 170 டிகிரி செல்சியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


சூப்பர் எர்த்:

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் பூமியை போல இருக்கின்றது. இதற்கு பெயர் சூப்பர் எர்த் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் மூனுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களுக்கு மூன் மூன் என்று பெயரிப்பட்டது. தினமும் புதிய புதிய வடிவில் பல்வேறு கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.