இதை செய்யாவிட்டால் உங்கள் வாட்ஸ்ஆப் தகவல் காலி.!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே தான் வருகிறது, அதன்படி தற்சமயம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் கணக்கை கூகுள் டிரைவோடு இணைக்கா

விட்டால், வாடஸ்ஆப் மெசேஜ்கள் அழிந்து விடும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் இந்தாண்டு துவகத்தில் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் தங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை கூகுள் டிரைவோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்து. இதை தொடர்ந்து வாட்ஸ்ஆப் அப்டேட் ஆன நிலையில், அதில் உள்ள மேசேஜ்கள் அனைத்தும் தானாக அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது வாட்ஸ்ஆப் உடன் கூகுள் டிரைவ் இணைப்பது எப்படி என்ற தகவலைப் பார்ப்போம்.

கூகுள் டிரைவ்:

இதை செயல்படுத்த உங்களுடைய ஸ்மார்ட்போனை கூகுள் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும், பின்பு ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.34 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். குறிப்பாக போதுமான அளவு மெமரி உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டும்.

 

செட்டிங்ஸ்

பின்பு வாட்ஸ்ஆப் வலது ஓரத்தில் இருக்கும் செட்டிங்ஸ்-க்குள் சென்று அதில் சாட்- ஆப்ஷனை கிளிக் செய்து சாட்பேக்அப்-க்குள் செல்ல வேண்டும்.

 

அனுமதி

அடுத்து கூகுள் அக்கவுன்டு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும், இதற்கு "OK" என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பின் சாட் தகவல்களை கூகுள் டிரைவ் அக்கவுன்ட்டில் பேக்கப் செய்ய முடியும்.

 

விரைவில்:

வாட்ஸ்ஆப் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது,
இந்த செயலியை பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.