பட்டப்பகலில் மெக்சிகோவில் தென்பட்ட ஏலியன் விண்கலம்!

விசித்திரமான விண்கலம் ஒன்று மெக்ஸிகோ நகர வானவீதியில் உலா வந்ததை பல்வேறு மக்கள் எடுத்துள்ளனர். தரையிலிருந்து சில நூறு மீட்டர் உயரத்தில் வானில் பறந்துகொண்டிருந்த அந்த மர்மபறக்கும் தட்டு, வேற்றுகிரகவாசிகளின் விண்கலன்களுக்கே உரித்தான ஒன்றாக ஏலியன் ஆர்வலர்களால் கூறப்படும் மங்கலான புலத்தை வெளியிட்டுசென்றாக கூறப்படுகிறது.

வேற்றுகிரகவாசிகள் அடிக்கடி பூமிக்கு வந்து செல்வதற்கான வலுவான ஆதாரமாக இது இருப்பதாக பலர் நம்புகின்றனர் மற்றும் இந்த காணொளியை படம்பிடித்த கேமராவின் தரமும் நன்றாக இருந்திருந்தால், "இது ஏலியன்கள் இருப்பதற்கான நிச்சய ஆதாரமாக இருக்கும்".

உண்மையில் கார்லஸ் சான்சீஷ் எனும் யூடியூப் பயனரால் படம்பிடிக்கப்பட்ட இந்த காணொளி, மாற்றுக்கருத்துடைய கோட்பாட்டாளர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டது.

மர்ம பறக்கும் தட்டுகள் பற்றிய பிரபல ஆர்வலரான ஸ்காட் சி வாரிங், ஏலியன் விண்கலம் தென்பட்ட இந்த நிகழ்வு உண்மையானது என நம்புகிறார். இதுதொடர்பாக அவரது யூஎப்ஓ சைட்டிங்ஸ் டெய்லி எனும் அவரது பிஃளாக்-ல், "இந்த அடர்நிற விண்கலம் வானின் திறந்தவெளியில் வரும் போது, இடைவெளிக்காக வெளியே வந்த பணியாளர் ஒருவரால் கவனிக்கப்பட்டது.அந்த மர்ம பறக்கும் தட்டு ஒரு பக்கம் சாய்ந்தவாறே நகர்ந்ததாகவும், பெரும்பாலான பறக்கும் தட்டுகள் தங்களின் திசையை கட்டுப்படுத்த இவ்வாறு செய்வதாகவும் அவர் எழுதியுள்ளார்.

மிகவும் மோசமான கேமராவில் படம்பிடித்தது வருத்தமான ஒன்று. மிகவும் பழைய போனை படம்பிடிக்க பயன்படுத்தினார் என நினைக்கிறேன். இதுவே ஐபோன் 7-8 ஆக இருந்திருத்தால், அந்த காணொளி நிச்சயம் ஏலியன்கள் இருப்பதற்கான நிச்சயமான ஆதாரமாக இருந்திருக்கும். அந்த பறக்கும் தட்டை சுற்றி நாம் பார்க்கும் மங்கலான பகுதியை பொறுத்தவரை, ஆயிரக்கணக்கான மர்மபறக்கும் தட்டை சுற்றி இதுபோன்றே இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன" என வாரிங் மேலும் தெரிவித்துள்ளார்.

மர்ம பறக்கும் தட்டுகளை பார்ப்பதற்கு மெக்ஸிகோ தான் ஹாட்ஸ்பாட். இவ்வருடத்தின் துவக்கத்தில் வெளியான காணொளி ஒன்றில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த புகையும் பள்ளம் மர்ம பறக்கும் தட்டு விழுந்து நொறுங்கிய இடமாக இருக்கலாம் என்ற யூகத்திற்கு வழிவகுத்தது.26அடி நீளமுள்ள அந்த மிகப்பெரிய எரியும் பள்ளமானது, வடகிழக்கு மெக்ஸிகோவின் கவ்ஹிலா மாநிலத்தின் டோரியோன்-சேல்டிலோ நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட காணொளியில் அறியப்பட்டது.

அந்த பள்ளத்தின் ஆழமானது அதன் நீளத்திற்கு சரிசமமாக இருந்ததாகவும், ஆனால் எதனால் அப்பள்ளம் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனாலும் இது ஏலியன் விண்கலம் அல்லது விண்கல் மோதியதால் ஏற்பட்ட பள்ளம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.

இதுதொடர்பாக யூடிபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ஏலியன் விண்கலம் ஒன்று தரையிறங்கி யாரும் பார்க்கும் முன்பு மீண்டும் விண்ணில் பறந்து சென்றதால் ஏற்பட்ட பள்ளமாக இருக்கலாம் என தெரிவிக்கிறார்.