மொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.! உஷார் மக்களே.!

இன்றைய காலகட்டத்தில், மக்கள் அனைவரும் பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாகத் தான் செய்துவருகிறோம். நேரடியாக வங்கிக்குச் சென்று பணம் அனுப்பும் மற்றும் பணம் எடுக்கும் முறைகளை யாரும் தற்பொழுது பின்பற்றுவதில்லை. பெரிய அளவிலான பண பட்டுவாடாக்கள் மட்டுமே நேரடியாக வங்கி வந்து செய்துகொள்ளுமாறு வங்கிகளே சொல்கின்றன.

ஆன்லைன் இல் பண செய்யப்படும் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது என்று வங்கிகள் சொன்னாலும், அவை முழுமையாகப் பாதுகாக்க படவில்லை என்பதே உண்மை. அதற்குச் சான்றாக ஏகப்பட்ட ஆன்லைன் திருட்டு மற்றும் ஹேக்கிங் கொள்ளைச் சம்பவங்கள் நாடு முழுதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஓ.டி.பி

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருட முயல்பவர்களுக்கு எதிராகவும், உங்களின் வங்கி கணக்கிற்கு பாதுகாப்பாக இருப்பதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்ட சேவைதான் ஓ.டி.பி (One-time password).

இரண்டடுக்கு பாதுகாப்பு அங்கீகாரம்

இந்த ஒரு முறை கடவுச்சொல், இரண்டடுக்கு பாதுகாப்பு அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. இவை மிகவும் பாதுகாப்பானது என்றும், ஓ.டி.பி எண்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும் நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

 

ஹேக்கிங் ட்ரிக்ஸ்

ஏகப்பட்ட ஹேக்கிங் ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி ஆன்லைன் திருட்டில் ஈடுபடும் கும்பலுக்கு ஓ.டி.பி மட்டும் என்ன விதிவிலக்கா, அதையும் ஹேக் செய்யக்கூடிய வழிகளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

 

மொபைல் ஹேக்

உங்களின் மொபைல் போன்னினை ஹேக் செய்து ஓ.டி.பி எண்களை எடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்த ஹேக்கர்கள், தற்பொழுது வேறு ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு பணத்தைக் கொள்ளை அடித்து வருகின்றனர்.

 

ரகசிய ஓ.டி.பி டூப்ளிகேட்

உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் என்னை மாற்றக் கோரி வங்கியிடம் சொல்வதன் மூலம், உங்கள் மொபைலிற்கு வரும் ரகசிய ஓ.டி.பி எண்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

ஆள்மாறாட்டம்

உங்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் வழி உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்கும் முறையை தற்பொழுது ஹேக்கர்கள் கையாண்டு வருகிறார்கள்.

 

ரூ.11 லட்சம் கொள்ளை

இந்த முறையைப் பயன்படுத்தி அண்மையில், டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அவரின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண்ணை மாற்றி ரகசிய ஓ.டி.பி எண்களை, ஹேக்கர்களின் மொபைல் எண்களுக்கு வரும் படி செய்து பணத்தை திருடியுள்ளனர். திருடப்பட்ட பணத்தை ஹேக்கர்கள் வெவ்வேறு 6 அக்கௌன்ட்களுக்கு மாற்றி ஏ.டி.எம் மற்றும் செக் மூலம் எடுத்துள்ளனர்.

 

டூப்ளிகேட் சிம் கார்டு

இத்துடன் இன்னொரு வழியிலும் உங்களின் ஓ.டி.பி எண்களை அவர்களால் எளிதில் பெற முடியும். உங்களின் தனிப்பட்ட அடையாள விபரங்களைப் போலியாக தயார் செய்து, உங்கள் டெலிகாம் ஆபரேட்டர் இடம் கொடுத்து டூப்ளிகேட் சிம் கார்டுகளை வாங்கி, உங்களின் ஓ.டி.பி எண்களுடன் உங்கள் பணத்தையும் திருட முடியும்.

 

விசாரணை செய்யுங்கள்

இந்த வலையில் நீங்கள் சிக்காமல் இருக்க, உடனே உங்களின் வங்கி மற்றும் டெலிகாம் ஆபரேட்டர் இடம், உங்களின் அக்கௌன்டில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்யுங்கள்.