உலகெங்கும் யூடியூப் வலைத்தளம் செயல்படவில்லை.! ஹேக்கர்களின் கைவரிசை.!

காலை எழுந்ததும் நியூஸ் பேப்பர் படிப்பவர் போல, காலை எழுந்த உடன் யூடியூப் பார்பவர்கள் தான் அதிகம் என்று சொல்ல வேண்டும்.

ஆனால் அனைத்து யூடியூப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, யூடியூப் செயலி மற்றும் யூடியூப் வலைத்தளம் இன்று செயல்படவில்லை.

யூடியூப் செயல்படவில்லை

காலை எழுந்தவுடன் பக்திப்பாடலில் துவங்கி, இரவு சீரியல் வரை அனைத்தும் யூடியூப் இல் பார்க்கும் அனைவர்க்கும், யூடியூப் செயல்படவில்லை என்ற செய்தி நிச்சயம் கடிமான ஒன்றாகத் தான் இருக்கும்.

உலகளவில்

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் அனைத்து இடங்களிலும் யூடியூப் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேலை யூடியூப் செயல்படாததற்கு காரணம் ஹாக்கர்களின் கைவரிசையாக இருக்குமோ என்று அனைவரும் யூகித்து வருகின்றனர்.

 

இண்டர்னல் சர்வர் எரர்

பயனர்கள் யூடியூப் ஓபன் செய்தால் "இண்டர்னல் சர்வர் எரர்" என்றே டெஸ்க் டாப் மற்றும் மொபைல்களில் காட்டுகிறது. யூடியூப் செயல்படவில்லை என்று யூடியூப் நிறுவனத்திற்கு உலகத்தில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

 

யூடியூப் நிறுவனக் குழு

தற்பொழுது நடந்துள்ள குளறுபடியால் யூடியூப் பயனர்களிடம், யூடியூப் குழு மன்னிப்பு கேட்டுள்ளது. இத்துடன் விரைவில் இந்தப் பளு நீக்கப்படுமென்றும் யூடியூப் நிறுவனக் குழு டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.