1 மணி நேரம் யூ டியூபை முடக்கிய அந்த பிரச்சனை.. டிவிட்டரிலும் சிக்கல்.. என்ன நடக்கிறது இணையத்தில்?

பிரபல தளமான யூ டியூப் இன்று காலை திடீர் என்று வேலை செய்யாமல் போனது.

சென்னை: பிரபல தளமான யூ டியூப் இன்று காலை திடீர் என்று வேலை செய்யாமல் போனது.

ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் கூகுளின் மிக முக்கியமான தயாரிப்புதான் யூ டியூப். உலகின் அதிக நபர்கள் பார்க்கும் தளத்தில் யூ டியூப் தளம் மற்றும் அப்ளிகேஷன் இரண்டாம் இடம் வகிக்கிறது.

யூ டியூப் பொதுவாக பெரிய அளவில் பிரச்சனையில் சிக்கியது இல்லை. பெரிதாக இந்த தளத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட்டது கிடையாது.

இயங்காமல் போனது

இந்த நிலையில் இன்று காலை சுமார் 1-2 மணி நேரம் யூ டியூப் உலகம் முழுக்க இயங்காமல் போனது. அனைத்து நாடுகளிலும் யூ டியூப் இயங்காமல் நின்றது. இது மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூகுள் நிறுவனம் இதை சரி செய்யும் பணிகளில் இறங்கி இருப்பதாக தெரிவித்தது.

சரியானது

அதன்பின் 1 - 2 மணி நேரத்தில் இந்த தளம் ஒவ்வொரு நாடாக சரிசெய்யப்பட்டது. இந்தியாவிலும் சரிசெய்யப்பட்டது. யூ டியூப் டெக்னிக்கள் குழு துரிதமாக செயல்பட்டு இதில் இருக்கும் பிரச்சனையை சரி செய்தது.

காரணம் என்ன

இதற்கு நிறைய காரணம் சொல்லப்படுகிறது. யூ டியூப் சர்வரில் ஏற்பட்ட டைம் அவுட் பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். 503 error என்று அழைக்கப்படும் இந்த பிரச்சனையால்தான் யூ டியூப் அதன் சர்வருடன் கனெக்ட் ஆக முடியாமல் முடக்கி உள்ளது. இதை சரி செய்யவே இவ்வளவு நேரம் எடுத்துள்ளது.

ஆனால் ஏன்

ஆனால் இதற்கு என்ன காரணம் என்று சொல்லப்படவில்லை. 503 error காரணமாகவே இந்த பிரச்சனை உருவானது. ஆனால் அந்த error எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை. கூகுள் இதுகுறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

இதுவா?

இரண்டு நாட்களுக்கு முன் உலகம் முழுக்க இணையம் 48 மணி நேரத்திற்கு சிக்கலை சந்திக்கும் என்று குறிப்பிட்டார்கள். குளோபல் ஷட்டவுன் என்று அழைக்கப்பட்ட இந்த இணைய பிரச்சனை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டிவிட்டர் இயங்கவில்லை

இப்படி யூ டியூப் செயலிழக்கும் 1 மணி நேரத்திற்கு முன் டிவிட்டரில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. 100 கோடி பேருக்கு இன்று அதிகாலை 6 மணிக்கு டிவிட்டர் தவறாக சில நோட்டிபிகேஷன்களை அனுப்பி உள்ளது. காரணமே இல்லாமல் இந்த நோட்டிபிகேஷனை தவறாக அனுப்பி உள்ளது. இதற்கான காரணமும் தெரியவில்லை. இது இணைய உலகத்தில் பெரிய குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது.