தெரியாமல் கூட வாட்ஸ்ஆப் ப்ளஸ்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டாம் ஏன்

வாட்ஸ்ஆப்பின் எண்ட்- டூ- எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption), செயல்திறன் மிக்க ஒரு அம்சமாக உள்ளது. ஆக, வாட்ஸ்ஆப் வழியாக நிகழும் எந்தவொரு உரையாடலையும் மூன்றாவது நபரால் படிக்க முடியாது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ் எனப்படும் ஒரு போலியான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட தகவலை அணுகுவதற்கான சாத்தியமான திறனை கொண்டுள்ளது இந்த வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஆனது ஸ்பேம் கமெண்ட்ஸ் மூலம் பரவுகிறது. அந்த ஸ்பேம் கமண்ட்ஸ் ஆனது, வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஏபிகே-வை டவுன்லோட் செய்ய வழிவகுக்கின்றன.

இந்த 'வாட்ஸ்ஆப் ப்ளஸ்' ஆனது, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி செயலியான 'வாட்ஸ்ஆப் ரிஸ்க்வேர்' அப்ளிகேஷனின் மற்றொரு மாறுபாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ் என்றால் என்ன.?

இந்த போலி ஆப் ஆனது, வாட்ஸ்ஆப்பின் அதிகாரப்பூர்வ (பச்சை நிற) லோகோவை, ஒரு தங்க நிறத்தில் கொண்டுள்ளது. டேட்டாவை திருடும் இந்த போலி வாட்ஸ் ஆப் ஆனது லாஸ்ட் சீன், ப்ளூ டிப்ஸ் மறைப்பு, டைப்பிங் வாசகம் ஆகியவற்றை மறைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பார்த்த விவரத்தை கூட மறைக்கலாம்.!

மேலும் இந்த போலியான ஆப் வழியாக. பிளே செய்யப்பட்ட வாய்ஸ் கிளிப்பை மறைக்கலாம் மற்றும் உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை பார்த்த விவரத்தை விட மெனு வழியாக மறைக்கலாம். கிடைக்கப்பெற்றுள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, இந்த போலி பயன்பாட்டை அபு என்று அழைக்கப்படும் ஒரு நபர் உருவாக்கியுள்ளார். இந்த இணையத்தளம் அரபு மொழியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 100 போட்டோ.!

உடன் ஒரே நேரத்தில் 100 போட்டோக்களை பகிர்தல், ப்ரைவஸி செட்டிங்ஸ்-க்கான இரகசிய பாஸ்வேர்ட் உட்பட பல நம்பமுடியாத அம்சங்களை கொண்டுள்ள இந்த வாட்ஸ்ஆப் முழுக்க முழுக்க போலியான ஒரு ஆப் ஆகும். மிகவும் சுவாரசியமான அம்சங்களை கொடுக்கும் மறுபக்கம் பயனரின் தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது.

எப்படி திருடுகிறது.?

WhatsApp Plus என்பது Android / PUP.Riskware.Wtaspin.GB என்கிற போலி ஆப்பின் மற்றொரு மாறுபாடு என்று கூறப்படுகிறது. பெரும்பாலான போலி வாட்ஸ்ஆப் ஏபிகே-வில் காணபப்டும் com.gb.atnfas என்கிற குறியீட்டை கொண்டுள்ளது. இந்த போலி ஆப் ஆனது எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னும் துல்லியமாக டீகோட் செய்யவில்லை என்றாலும் கூட, இது உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் மற்றும் பலவற்றை திருடுகிறது என்பது மட்டும் உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

எப்போது தூங்க செல்கிறார் என்பது உட்பட.!

சமீபத்தில் 'சாட்வாட்ச்' எனப்படும் ஒரு புதிய ஆப் வழியாக ஒரு பயனரின் சாட் நடவடிக்கையை கண்காணிக்க முடியும் என்கிற தகவல் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கூறப்படும் சாட்வாட்ச் ஆப் ஆனது வாட்ஸ்ஆப்பின் ஆன்லைன் அல்லது ஆப்லைன் நிலையை கண்காணிக்கிறது. அதன் வழியாக ஒருவர் எத்தனை முறை வாட்ஸ்ஆப்பிற்குள் நுழைகிறார்.? ஒவ்வொரு நாளும் எப்போது தூங்க (படுக்கைக்கு) செல்கிறார் போன்ற மதிப்பீடுகளை கணக்கிடுகிறது.

உங்களுக்கே தெரியாமல்.!

இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால், உங்களின் வாட்ஸ்ஆப் ஆன்லைன் / ஆப்லைன் நிலையைப் பயன்படுத்தி, நீங்கள் வாட்ஸ்ஆப்பில் பேசுவதற்கு எப்போது தயாராக இருப்பீராகள் என்பதை உங்களுக்கே தெரியாமல் ஆராய்ந்து வைத்திருக்கும் இந்த சாட்வாட்ச் ஆப். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களின் ரீட் ரெசிப்ட் அல்லது லாஸ்ட் ஸீன் போன்ற கடுமையான ப்ரைவஸி செட்டிங்ஸை 'ஆப்' செய்து வைத்திருந்தாலும் கூட, சாட்வாட்ச் ஆப் வழியாக நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள் என்பது தான்.!

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.!

லைஃப்ஹேக்கர் வழியாக வெளியாகியுள்ள இந்த டேட்டா திருட்டு அறிக்கையின் படி, 'சாட்வாட்ச் ஆப் ஆனது முதலில் ஐஓஎஸ் தளத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் கண்டறியப்பட்டு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. தற்போது சாட்வாட்ச் ஆப், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கிடைக்கிறது. லைஃப்ஹேக்கர் அறிக்கையில் வெளியான மற்றொரு மோசமான தகவல் என்னவென்றால், சாட்வாட்ச் ஆப்பின், வெப் வெர்ஷனை உருவாக்கும் முனைப்பில் டெவலப்பர்கள் பணியாற்றி வருகிறார்களாம். அதே அறிக்கையில் 'இந்த குறிப்பிட்ட ஆப்பை பிளாக் செய்யும் பணிகளை வாட்ஸ்ஆப் விரைவில் நிகழ்த்தும்' என்று கூறி ஆறுதல் அளிக்கிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ