ஏர்டெல் அதிரடி 1ஜிபி - 2ஜிபி இல்ல முழுசா 1000ஜிபி டேட்டா இலவசம் பெறுவது எப்படி

அப்படியான ஜியோவின் வருகைக்கு பின்னர் சுதாரித்துக் கொண்ட பார்தி ஏர்டெல், ஜியோவின் பல பாணிகளை கூச்சப்படாமல் காப்பி அடித்தது. ஒருகட்டத்தில் ஜியோவையே மிஞ்சியது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஒரு பெரிய நன்றி. ரிலையன்ஸ் ஜியோ மட்டும் அறிமுகம் ஆகாமல் இருந்திருந்தால் நாம் இன்னமும் 100எம்பி மற்றும் 300எம்பி 3ஜி டேட்டாவை ரூ.30/-க்கும் அல்லது ரூ40/-க்கும் தான் வாங்கி கொண்டிருப்போம்.

அப்படியான ஜியோவின் வருகைக்கு பின்னர் சுதாரித்துக் கொண்ட பார்தி ஏர்டெல், ஜியோவின் பல பாணிகளை கூச்சப்படாமல் காப்பி அடித்தது. ஒருகட்டத்தில் ஜியோவையே மிஞ்சியது. அப்படியான ஒரு அடுத்தகட்ட ஏர்டெல் அதிரடி தான் இந்த 1000ஜிபி ப்ரீ டேட்டா திட்டம். அதென்ன திட்டம் என்பதை விரிவாக காணலாம்.!

மூலம் : டெலிகாம்டால்க். இன்ஃபோ

பிக் பைட் ஆபர்.!

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டமான 'பிக் பைட் ஆபர்' (Big Byte Offer), 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த சலுகை, மார்ச் 31, 2018 வரை செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுருந்தந்து, இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரோல்-ஓவர் செய்யும் வசதி.!

இந்த சலுகை வாய்ப்பின் சிறப்பான பகுதி என்னவென்றால், குறிப்பிட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய கூடுதலாக 1000ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். மற்றும் அந்த பயன்படுத்தாத டேட்டாவை, அக்டோபர் மாத இறுதி வரை ரோல்-ஓவர் செய்யும் வசதியும் உண்டு.

1000ஜிபி கூடுதல் டேட்டா.!

கிடைக்கப்பெறும் கூடுதல் 1000ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவின் வேகமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திட்டத்தை பொறுத்தது. அதாவது, ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு வி- ஃபைபர் திட்டங்களான ரூ.1099/- மற்றும் ரூ.1299/- திட்டங்களும் (டெல்லி வட்டார விலை) 1000ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும்.

1000ஜிபி போனஸ் டேட்டாவை பெறுவது எப்படி?

ஏர்டெல் நிறுவனத்தின் படி, இந்த வாய்ப்பைப் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையத்தளமான 'www.airtel.in/broadband' சென்று, குறிப்பிட்டுள்ள திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் மொபைல் எண் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து புதிய பிராட்பேண்ட் இணைப்புக்கான கோரிக்கையை எழுப்ப வேண்டும். இந்த ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்பு சார்ந்த கோரிக்கையை, கஸ்டமர் கேர் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1099/-ன் நன்மைகள்.!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1099/- திட்டமானது, 100 எம்பிபிஎஸ் வேகத்திலான 250ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு ரோல்-ஓவர் செய்யும் வசதியுடன் கூடிய டேட்டா நன்மைகளை மட்டுமின்றி வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளும் அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், 1000ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவுடன் சேர்த்து இலவச அமேசான் ப்ரைம் சந்தாவும் கிடைக்கும். ரூ.1099/-க்கு கிடைக்கும் இந்த திட்டத்தை, ஆறு மாத கால அட்வான்ஸ் ரெண்டல் முறையின் கீழ் ரூ.933/-க்கும் பெறலாம்.

ரூ.1299/-ன் நன்மைகள்.!

இந்த ரூ.1299/- திட்டமானது, 100 எம்பிபிஎஸ் வேகத்திலான 350ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு ரோல்-ஓவர் செய்யும் வசதி, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு ஆகிய நன்மை, 1000ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவுடன் சேர்த்து இலவச அமேசான் ப்ரைம் சந்தா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. ரூ.1299/- மதிப்புள்ள இந்த ஏர்டெக் பிராட்பேண்ட் திட்டத்தை, ஆறு மாத கால அட்வான்ஸ் ரெண்டல் முறையின் கீழ் ரூ.1100/-க்கும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ