மிக விரைவில் வெளியாகும் ஜியோ ஜூஸ் அந்த ஜூஸ் என்றால் என்ன

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, அதன் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் வேலிடிட்டியை, மேலுமொரு ஆண்டு இலவசமாக நீட்டித்து அறிவித்துள்ளதை தொடர்ந்து, 'ஜியோ ஜூஸ்' என்கிற பெயரில் ஒரு மர்மமான விளம்பர டீஸரை அதன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வெளியான 'ஜியோ ஜூஸ்' டீஸர் வெளிப்படுத்தும் விஷயங்கள் என்ன.? குறிப்பாக அந்த டீஸரில் காணப்படும் 'பீட்டா' என்க்ரியா வார்த்தை எதை குறிப்பிடுகிறது.?

பேட்டரி சேவர் பயன்பாடாக இருக்கலாம்.!

வெளியான டீஸரில் இருந்து ஜியோ ஒரு ஆப்பை அறிமுகம் செய்யு உள்ளது என்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக அந்த ஆப், ஒரு பேட்டரி சேவர் (Battery Saver) பயன்பாடாக இருக்கலாம்.

 

'பீட்டா' என்கிற வார்த்தை.?

டீஸரில் காட்சிப்படும் 'பீட்டா' என்கிற வார்த்தையானது, இந்த ஆப்பின் பீட்டா பதிப்பை வெளிப்படுத்தலாம். அதாவது பீட்டா பதிப்பில் ரம்ப சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அது பரந்த பொதுமக்களுக்கு வெளியிடப்படலாம் என்று அர்த்தம்.

 

மிக விரைவில்.!

ஜியோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான டீஸரைத் தவிர்த்து வரவிருக்கும் இந்த ஜியோ ஜூஸ் ஆப் பற்றிய வேறு எந்த தகவலையும் ஜியோ வெளியிடவில்லை. இதன் வெளியீடு அருகாமையில் தான் உள்ளது என்பது வெளிப்படுத்தும் 'மிக விரைவில்' வாசகமும் டீஸரில் இடமபெற்றுள்ளது.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ