அடுத்த 1 ஆண்டுக்கு இலவச ஜியோ ப்ரைம் சந்தா யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கு கிடைக்காது

ரூ.99/- மதிப்புள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையானது ஒரு ஆண்டுககு செல்லுபடியாகும் என்றும் கடந்த ஆண்டிற்கான செல்லுபடி இன்றோடு (மார்ச் 31, 2108) முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலைப்பாட்டில் தான் ஜியோ இந்த இலவச வேலிடிட்டி நீட்டிப்பை அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையஸ் ஜியோவின், ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவின் செல்லுபடியை மேலும் ஒரு வருடத்திற்கு, முற்றிலும் இலவசமாக நீட்டிப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.

ரூ.99/- மதிப்புள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையானது ஒரு ஆண்டுககு செல்லுபடியாகும் என்றும் கடந்த ஆண்டிற்கான செல்லுபடி இன்றோடு (மார்ச் 31, 2108) முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலைப்பாட்டில் தான் ஜியோ இந்த இலவச வேலிடிட்டி நீட்டிப்பை அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்.? இந்த வாய்ப்பை பெற உதவும் ஆப்ட்-இன் செயல்முறை என்றால் என்ன.? அதை நிகழ்த்துவது எப்படி.?

மார்ச் 31, 2018-க்கு முன்னர்.!

இன்று, அதாவது மார்ச் 31, 2018-க்கு முன்னர் ரூ.99/- என்கிற ஜியோ ப்ரைம் சந்தாவை ரீசார்ஜ் செய்த்துள்ள அனைத்து ஜியோ பயனர்களுக்கு இந்த வேலிடிட்டி நீட்டிப்பு சலுகை கிடைக்கும். அதாவது, கடந்த ஆண்டிற்கான ஜியோ ப்ரைம் சந்தாவை ரீசார்ஜ் செய்து இருந்தால் போதும், இந்த ஆண்டுக்கான ரூ.99/-ஐ ரீசார்ஜ் செய்ய வேண்டியது இல்லை.

அடுத்த 12 மாதங்களுக்கான வேலிடிட்டி நீட்டிப்பு

கடைசியாக நீங்கள் ஜியோ ப்ரைம் சந்தாவை ரீசார்ஜ் செய்தது மார்ச் மாதமா அல்லது ஆகஸ்டு அல்லது ஜனவரி மாதமா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஒருமுறையேனும் ரூ.99/- ரீசார்ஜ் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த 12 மாதங்களுக்கான வேலிடிட்டி நீட்டிப்பு கிடைக்கும்.

ஏப்ரல் 1-க்கு பின்னர்.!

ஒருவேளை தற்போது வரையிலாக ரூ.99/- என்கிற ப்ரைம் மெம்பர்ஷிப் ரீசார்ஜை செய்யாமல் ஜியோ நன்மைகளை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், ஏப்ரல் 1-க்கு பின்னர் நீங்கள் ரூ,99/- என்கிற ஜியோ ப்ரைம் ரீசார்ஜை செய்ய வேண்டியது இருக்கும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை.!

ஏற்கனவே ரீசார்ஜ் செய்தவர்கள், ஒரு எளிமையான ஆப்ட்-இன் செயல்முறையை நிகழ்த்துவதின் வழியாக, அவர்களிஜ் ஜியோ ப்ரைம் சந்தாவை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை நீட்டித்துக்கொள்ளலாம். சரி அதை நிகழ்த்துவது எப்படி.?

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ