ரூ.349 என்கிற விலைக்கு கிடைக்கும் மூன்று திட்டங்கள் எது பெஸ்ட்

பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய மூன்று டெலிகாம் நிறுவங்களுமே, அதன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கத்தின்கீழ், மிகவும் கவர்ச்சிகரமான திட்டங்களை, தொடர்ச்சியான முறையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இப்படியானதொரு கட்டண யுத்தத்தில் வெளியானதொரு திட்டம் தான் ரூ.349.!

இந்த விலைப்புள்ளியில் உள்ள சுவாரசியம் என்னவெனில், ரூ.349/- என்கிற ரீசார்ஜ் திட்டத்தை மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நிறுவங்களுமே கொண்டுள்ளன. ஒரே மாதிரியான விலை நிர்ணயம் வேண்டுமானால் ஒரு வாடிக்கையாளரை குழப்பலாம். ஆனால் அந்தந்த திட்டஙகளின் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்ட பின்னர், ஒரு குழப்பமும் இருக்காது.

பார்தி ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- ஆனது நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கும் ஒரு திட்டமாகும். உடன் எந்த தினசரி மற்றும் மாதாந்திர வரம்பும் இல்லாத, ரோமிங் அழைப்புகள் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் வழங்குகிறது.

 

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்-ன் ரூ 349/- ஆனது, 'தில் கோல் கே போல்' என்று பெயரின்கீழ் கிடைக்கும் ஒரு திட்டமாகும். நன்மைகளை பொறுத்தவரை, (ஏர்டெல் உடன் ஒப்பிடும் போது) இந்த திட்டம் மிகவும் வேறுபடுகின்றது. இதன் செல்லுபடியாகும் காலம் 54 நாட்கள் ஆகும். நாள் ஒன்றிற்கு 1ஜிஇ அளவிலான டேட்டா என மொத்தம் 54 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற ரோமிங், உள்ளூர் மற்றும் எல்டிடி அழைப்புககள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

 

ரிலையன்ஸ் ஜியோ

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349/- ஆனது மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி என மொத்தம் 105 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகியவைகளையும் வழங்குகிறது.

 

எது பெஸ்ட்.?

ரிலையன்ஸ் ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனங்களின் இந்த மூன்று திட்டங்களில் எது சிறந்தது என்ற கேள்வி எழுந்தால், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ349/-தான் வெற்றியாளர். ஏனெனில் அதன் செல்லுபடி ஒரு நம்பமுடியாத 70 நாட்கள் ஆகும். செல்லுபடி காலம் பற்றிய கவலை இல்லை, தினசரி அடிப்படையிலான டேட்டா பயன்பாடு தான் முக்கியம் என்று கூறும் பயனர்களுக்கு ஏர்டெல் ரூ.349/- தான் சிறந்தது, ஏனெனில் அது நாள் ஒன்றிற்கு 2.5ஜிபி டேட்டா வழங்குகிற

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ