உங்கள் ஸ்மார்ட்போன் வெடிக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

தற்சமயம் வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டவையாக உள்ளது, ஆனாலும் சில ஸ்மார்ட்போன்களில் பல்வேறு பிரச்சணைகள் உள்ளது. குறிப்பாக சம்சாம், ஐபோன் போன்ற ஸ்மார்ட்போன் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.

இப்போது வெளிவரும் சில ஸ்மார்ட்போன்களில் பேட்டரி சார்ந்த பல்வேறு பிரச்சணைகள் ஏற்படுகிறது, குறிப்பாக போன் தயாரிப்பாளர்கள் தங்களின் போன்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக, மிக விரைவில் சார்ஜ் ஆகும், அதிக நேரம் சார்ஜ் நீடிக்கும் போன்ற அறிவிப்புகள் வெளியிடுகின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட நேரம் வரை தான் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய வேண்டும், மேலும் பாதுகாப்புடன் பேட்டரியைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ளிகேஷன்கள்:

ஸ்மார்ட்போன்களில் குறிப்பிட்ட அப்ளிகேஷன்கள் மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது, நீங்கள் ஸ்மார்ட்போனில் பல அப்ளிகேஷன்களை உபயோகம் செய்வதால் மெமரியை வெறுமனே அடைத்துக்கொண்டிருக்கும், மேலும் அந்த அப்ளிகேஷன்கள் பின்புறத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போன் கணிசமாக வெப்பமடையும், பின்பு பேட்டரியும் பாதிக்கப்படும்.

 

சார்ஜர்:

உங்கள் ஸ்மார்ட்போனை வேறு சார்ஜர் கொண்டு பயன்படுத்தும்போது, கண்டிப்பாக ஸ்மார்ட்போன் சூடாகும். சில நேரங்களில் வெடிப்பதற்கு
கூட வாய்புள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரம் வரை தான் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வேண்டும், இல்லையென்றால் பேட்டரி செயல் இழந்துவிடும்
அல்லது சில சமயம் வெடிப்பதற்கு வாய்புள்ளது.

 

ரீ-ஸ்டார்ட் :

ஸ்மார்ட்போன் அதிக நேரம் உபயோகம் செய்தால், கண்டிப்பாக ரீ-ஸ்டார்ட் செய்யவேண்டும், இதன் மூலம் ஸ்மார்ட்போனில் செயல்படும் அப்ளிகேஷன்கள் மூடப்பட்டுரேம்-க்ளீன் ஆவதால் ஸ்மார்ட்போனின் செயல்திறன் அதிகமாகும். குறிப்பாக ஸ்மார்ட்போனை அவ்வப்போது ரீ-ஸ்டார்ட் செய்யவில்லை என்றால், கண்டிப்பாக ஸ்மார்ட்போன் சூடாகும்.

 

இன்டர்நெட்:

பொதுவாக ஸ்மார்ட்போனில் இன்டர்நெட், விடியோ போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்தினால் கணிசமாக வெப்பமடையும், அதன்பின்பு வெடிப்பதற்கும் வாய்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மொபைல் டேட்டா:

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் மக்கள் அதிக நேரம் 4ஜி டேட்டாவை பயன்படுத்துகின்றனர், இதன் மூலம் விரைவில் சார்ஜ் காலியாகும்
நிலை உள்ளது, அதன்பின்பு பேட்டரி சூடாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவையில்லாத நேரத்தில் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து
வைப்பது மகிவும் நல்லது.

 

சேமிப்பு:

உங்கள் ஸ்மார்ட்போனில் தேவையான அளவு மெமரியை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது, குறிப்பாக தேவையில்லாத போட்டோ, , ஆப் போன்றவற்றை டெலிட் செய்வதால் பேட்டரி பாதுகாப்பாக இருக்கும், அதன்பின்பு வெடிப்பதற்கும் வாய்ப்பு இல்லை.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ