வெளியானது டிராய் 4ஜி ஸ்பீட் டெஸ்ட் அறிக்கை ஏர்டெல் ஜியோ பயனர்களுக்கு ஷாக்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் போட்டியாளர்களான பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களின் டவுன்லோட் மற்றும் அப்லோட் ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையை, இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள கடந்த பிப்ரவரி மாததிற்கான 4ஜி டவுன்லோட் மற்றும் அப்லோட் ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையானது, பெரும்பாலான ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு 'ஷாக்' கொடுக்கும் விவரங்களை கொண்டுள்ளது. குறிப்பாக சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட இன்டிபென்டெண்ட் 4ஜி ஸ்பீட் டெஸ்டில் மோசமான வேகங்களை பதிவு செய்த ஜியோ - மைஸ்பீட் (MySpeed) ஆப் மூலம் நிகழ்த்தப்பட்ட - இந்த டிராய் ஸ்பீட் டெஸ்ட்டில் என்ன நிலையில் உள்ளது என்பதை நீங்களே பாருங்கள்.!

இரண்டாவது இடத்தில்.?

வெளியான அறிக்கையின்படி, 4ஜி டவுன்லோட் ஸ்பீட் டெஸ்டில், பார்தி ஏர்டெல் நிறுவனமானது இரண்டாவது இடத்திலும், வோடபோன் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளது, நான்காவது இடத்தில ஐடியா செல்லுலார் உள்ளது. முதல் இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. பிப்ரவரி மாதம் பதிவாகியுள்ள வேகமானது ஜனவரி மாதத்தில் பதிவானதை விட அதிகம் என்பதும், இருப்பினும் கடந்த டிசம்பரில் பதிவான வேகத்தை விட குறைவு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் ஜியோவின் 21.3எம்பிபிஎஸ் வேகம்.!

மறுகையில், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மூன்று மற்ற டெலிகாம் (பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ) ஆபரேட்டர்களின் டவுன்லோட் வேகமானது குறைந்துள்ளது. அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ 21.3எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்க வேகத்துடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 

வோடாபோன் மற்றும் ஐடியாவின் நிலை என்ன.?

அதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் ஆனது 8.8எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்க வேகத்தை எட்டி இரண்டாவது இடத்தில உள்ளது. வோடபோன் ஆனது 7.2எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்க வேகத்தையும், ஐடியா செல்லுலார் ஆனது 6.8 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்க வேகத்தை எட்டி முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் பதிவான டவுன்லோட் ஸ்பீட் விவரங்கள் பின்வருமாறு:

ரிலையன்ஸ் ஜியோ - 19.4 எம்பிபிஎஸ்
பார்தி ஏர்டெல் - 9.4 எம்பிபிஎஸ்
வோடபோன் - 8.9 எம்பிபிஎஸ்
ஐடியா செல்லுலார் - 7எம்பிபிஎஸ்

 

அப்லோட் ஸ்பீட் டெஸ்டில் எல்லாமே தலைகீழ்.!

அப்லோட் வேகத்தை பொறுத்தவரை, 6.9 எம்பிபிஎஸ் என்கிற வேகத்துடன் பிப்ரவரி மாதத்திலிலும் ஐடியா செல்லுலார் முதல் இடத்தை தொடர்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் 5.5எம்பிபிஎஸ் என்கிற அப்லோட் வேகத்துடன் வோடபோன் உள்ளது. 4.5எம்பிபிஎஸ் என்கிற வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோ மூன்றாவது இடத்திலும், 3.9எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் பார்தி ஏர்டெல் கடைசி இடத்திலும் உள்ளது.

 

வோடபோன் மட்டும் பின்வாங்கியுள்ளது.!

இரண்டாவது இடத்தில் இருந்தாலும் கூட. கடந்த ஜனவரி மாதம் பதிவான அப்லோட் வேகத்துடன் ஒப்பிடும் பொது வோடபோன் குறைவான வேகத்தையே பதிவு செய்துள்ளது. அதாவது 6.1 எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து 5.5 எம்பிபிஎஸ் என்கிற புள்ளியை எட்டியுள்ளது. மறுகையில் மற்ற மூன்று டெலிகாம் நிறுவனங்களும் வளர்ச்சியில் உள்ளன.

 

கடந்த ஜனவரி மாதம் பதிவான அப்லோட் ஸ்பீட் விவரங்கள் பின்வருமாறு:

ஐடியா செல்லுலார் - 6.7 எம்பிபிஎஸ்
வோடபோன் - 6.1 எம்பிபிஎஸ்
ரிலையன்ஸ் ஜியோ - 4.4 எம்பிபிஎஸ்
பார்தி ஏர்டெல் - 3.8 எம்பிபிஎஸ்.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ