ரூ.379 -க்கு 4ஜிபி டேட்டா நாள் பிஎஸ்என்எல் அதிரடி ஆப் ஆகிப்போன அம்பானி

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) பிஎஸ்என்எல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.509/-க்கு எதிராக ரூ.379/- என்கிற ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) பிஎஸ்என்எல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.509/-க்கு எதிராக ரூ.379/- என்கிற ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் டேட்டா + வாய்ஸ் நன்மைகள் என்ன.? வேலிடிட்டி என்ன.? எந்தெந்த வட்டங்களில் இந்த திட்டம் கிடைக்கும்.? ஜியோவின் ரூ.509/-க்கும் இதற்குமான ஒப்பீடு என்ன.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

30 நாட்கள் என்கிற செல்லுபடி.!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிஎஸ்என்எல் ரூ.379/- ஆனது ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது மற்றும் 30 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. அதாவது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 120 ஜிபி டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம்.

பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல்.!

டேட்டாவை தவிர்த்து, இந்த திட்டமானது, வரம்பற்ற பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகளை வழங்குகிறது. இருப்பினும், மற்ற நெட்வொர்க்குகள் உடனான குரல் அழைப்பானது நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.!

இறுதியாக, சமீபத்தில் வெளியான பெரும்பாலான திட்டங்களை போன்றே, இந்த பிஎஸ்என்எல் திட்டத்திலும் எந்த எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்காது என்பதும், தற்போது வரையிலாக இந்த ரூ..379/- திட்டமானது கேரளாவில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள் கூடுதல் செல்லுபடி

சுவாரசியம் என்னவென்றால், இதே அளவிலான டேட்டாவை (4ஜி/நாள்) வழங்கும் ஜியோவின் திட்டத்தை விட இது விலை குறைவாகும் மட்டும் 2 நாட்கள் கூடுதல் செல்லுபடியையும் கொண்டுள்ளது. இருப்பினும் டேட்டா வேகம் சார்ந்த ஒப்பீட்டில் வழக்கம் போல ரிலையன்ஸ் ஜியோ தான் முன்னிலை வகிக்கிறது.

ஜியோ ரூ.509

ஜியோவின் ரூ.509/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தில், நாள் ஒன்றிற்கு 4ஜிபி டேட்டா என மொத்தம் 112 ஜிபி டேட்டாவை வழங்கும். உடன், ரோமிங் உட்பட எந்த வரம்பும் இல்லாத வாய்ஸ் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் வரை ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ