உங்கள் மொபைலில் உள்ள போன் நம்பர்கள் சேகரிக்கப்படும் இடம் இதுதான்

இது சார்ந்த துல்லியமான தொழில்நுட்ப விவரங்கள் இன்னமும் தெளிவாக இல்லை. அதாவது இந்த ரகசியம் கடைசி வரை வெளியாகாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் அனைவருக்குள்ளும் எழும் முதல் கேள்வி - பேஸ்புக் எப்படி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை சேகரித்தது?

இது சார்ந்த துல்லியமான தொழில்நுட்ப விவரங்கள் இன்னமும் தெளிவாக இல்லை. அதாவது இந்த ரகசியம் கடைசி வரை வெளியாகாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பேஸ்புக் அந்த குறிப்பிட்ட தொழில்நுட்ப விவரங்களை வெளிப்படுத்த முடியாது, வெளிப்படுத்தாது.

ஆனால் கடந்த திங்களன்று பேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. அதாவது 'பயனர்களின் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்கள் ஆனது மெசன்ஜர் லைட் ஆப் ஆப் வழியாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் பயனர்களின் அனுமதியை பெட்ரா பின்னரே அது வேலை செய்கிறது, என்கிறது பேஸ்புக்.

கால் மற்றும் மெசேஜ் ஹிஸ்டரி.!

'நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மெசன்ஜர் அல்லது பேஸ்புக் லைட் ஆப்பை சைன்-அப் (sign up) இன்ஸ்டால் செய்யும் போதோ அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வழியாக மெசன்ஜர் ஆப்பிற்குள் லாக்-இந்த செய்யும் போதோ, ​​உங்களின் காண்டாக்ட்ஸ் (தொடர்பு எண்கள்) மட்டுமின்றி, கால் மற்றும் மெசேஜ் ஹிஸ்டரி அணுகலுக்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.

பாதுகாப்பு ஓட்டை.!

அதாவது 'லேர்ன் மோர்' (Learn More) அல்லது நாட் நௌவ் (Not Now) 'இப்போது இல்லை' என்கிற இரண்டு விருப்பங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். ஆனால் பேஸ்புக் லைட் ஆப்பை பொறுத்தவரை டேர்ன் இட் (Turn It) அல்லது ஸ்கிப் (Skip) என்கிற இரண்டு விருப்பங்கள் மட்டுமே கிடைக்கும். இதன் வழியாக பேஸ்புக் லைட் ஆப்பில் உள்ள பாதுகாப்பு ஓட்டையை வெளிப்படையாக அறிய முடிகிறது.

சேகரிக்கப்பட்டது எப்படி.?

பிரச்சனை அதோடு முடிந்துவிடவில்லை, அங்கு தான் அதிகரித்தது. தகவல் திருட்டுக்கு உள்ளான யூசர்களில், மெசன்ஜர் மற்றும் பேஸ்புக் லைட் ஆப்பை பயன்படுத்தாதவர்களும் உள்ளன. அப்படி இருக்க, அவர்களின் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்கள் சேகரிக்கப்பட்டது எப்படி.? - இந்த கேள்விக்கு தான் விடை கிடையாது.

உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் மட்டுமே உள்ளன.!

இதனால் தான், யூசர்களின் விவரங்களை, பேஸ்புக் எவ்வாறு சேகரிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று பேஸ்புக்கை குருட்டுத்தனமாக நம்புவது, இரண்டாவது பேஸ்புக் வழியாக தகவல்கள் திருப்படுகிறது என்பதை நம்புவது. மூன்றாவதாக நீங்கள் செய்யக்கூடிய அல்லது செய்ய வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. அது பேஸ்புக் வழியாக, உங்களின் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விபரங்கள் பதிவு செய்யப்படுவதை தடுப்பது. அது எப்படி?

பேஸ்புக் மெசன்ஜர்:

மெசன்ஜர் உள்நுழைந்து > செட்டிங்ஸ் > பீபிள் (People) > டர்ன் ஆப் காண்டாக்ட் சின்க என்பதை தேர்வு செய்யவும். இதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட தொடர்புகளை நீக்க, இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து நுழைந்து அங்கு பதிவாகியுள்ள உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் மொபைல் எண்களை டெலிட் ஆல் (Delete all) செய்யவும்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ