ஏர்டெல் ஸ்டார் இந்தியா இடையே என்ன பிரச்சனை எதற்காக இந்த சமுகவலைதள சண்டை

விலை போர்

ஸ்டாரின் வீடியோவை பார்க்கும் போது டிஷ் டிவி சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இடையில் விலை போர் ஒன்று உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஸ்டார், ஏர்டெல் இடையிலான இந்தப் பிரச்சனைக்கு வர இருக்கும் விவோ ஐபிஎல் 2018 விளையாட்டு போட்டி தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

ஒப்பந்தம்

ஏர்டெல் - ஸ்டார் சேனல்களுக்கு இடையிலான ஒப்பந்தம் வர இருக்கும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஸ்டார் நிறுவன சேனல் கட்டணங்களை உயர்த்தி இருப்பதால் நீட்டிப்பு பணிகளைச் செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் சேனல் ஒளிபரப்பப் படாது என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. எனவே ஸ்டார் அதற்குப் பேஸ்புக் மூலமாகப் பதில் அடி அளித்துள்ளது.

ஏர்டெல் கண்டனம்

ஸ்டார் இந்தியாவின் பேஸ்புக் பதிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம் ஸ்டார் நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தவறான பாதையில் வழிநடத்துகிறது. ஸ்டார் நிறுவனம் 2018-2022-ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புச் செய்ய 16,350 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதால் அவர்களது சேனல்களின் கட்டணத்தினை அதிகளவில் உயர்த்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஏர்டெல் விளக்கம்

மேலும் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ளவர்களுக்கு ஸ்டார் எஸ்டி சேனல்கள் ஏர்டெல் டிஜிட்டல் டிவி சேவையில் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவற்றுக்குக் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்றும் அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி அல்லது தமிழ் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

ஸ்டார் எச்டி சேனல்கள் கிடைக்குமா? கிடைக்காதா?

குறிப்பிட்ட சில ரீசார்ஜ் பேக்குகளுக்கு மட்டும் ஸ்டார் எச்டி சேனல்கள் கிடைக்கும் என்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தினை மட்டும் பெற்று சேனலை ஒளிபரப்புச் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ