கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் நாள் ஒன்றிற்கு 2ஜிபி யூஸ் பண்ணலாம்

முதலில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஒரு பெரிய நன்றி. ஏனெனில் இந்திய டெலிகாம் துறையில் நடக்கும் மிகத்திவீரமான கட்டண யுத்தத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே நமது அன்பிற்குரிய அண்ணன் அம்பானி தான்.!

ஆரம்பகாலத்தில் என்ன செய்வது என்று அறியாமல் திணறிய பார்தி ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள், பின்னர் வேறுவழியில்லாமல் ஜியோவின் பாணியை பின்பற்ற தொடங்கின.

அதாவது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா என்கிற பிரதான நன்மையை வழங்க தொடங்கின. இன்னமும் நீங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா திட்டங்களை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றால்.? அதற்கு மேற்பட்ட திட்டங்களான 2ஜிபி/நாள் அல்லது 2.5ஜிபி/நாள் போன்ற திட்டங்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை என்று எண்ணி கொண்டிருக்கிறீர்கள் என்றால் - ஐ யம் வெரி சாரி.!

நாளுக்கு நாள்அதிகரிக்கும் டேட்டா தேவை.!

ஒருகட்டத்தில் 1ஜிபி/நாள் என்கிற நன்மை ஒரு பெரிய அளவிலான சலுகை போன்றே காட்சிப்படாத நிலை உருவானது. அங்குதான் ஆரம்பித்தன நாள் ஒன்றிற்கு 2ஜிபி மற்றும் 2.5ஜிபி வழங்கும் திட்டங்கள். உங்களின் டேட்டா தேவையானதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதா.? ஒரே மாதிரியான நன்மைகளை வழங்கினாலும் எந்த நிறுவனம் மலிவான விலையின்கீழ் நன்மைகளை வழங்குகிறது என்பதில் குழப்பமா.? நீங்கள் சரியான இடத்தில தான் உள்ளீர்கள்.

 

ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள்.!

இந்த பிரிவின்கீழ், ஜியோ தற்போது நான்கு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள் அனைத்துமே நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் வெவ்வேறு செல்லுபடியாகும் காலம் கொண்டுள்ளன.

 

ஜியோ ரூ.198 (செல்லுபடி + நன்மைகள்)

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.198/- ஆனது மொத்தம் 56 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இது நாள் ஒன்றுக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் உடனாக ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

 

ஜியோ ரூ.398 (செல்லுபடி + நன்மைகள்)

70 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.198/- ஆனது மொத்தம் 140 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதுவும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் உடனாக ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகிய நன்மைகளை வழங்கும்.

 

ஜியோ ரூ.448 (செல்லுபடி + நன்மைகள்)

84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.198/- ஆனது மொத்தம் 140 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதுவும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் உடனாக ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

 

ஜியோ ரூ.498 (செல்லுபடி + நன்மைகள்)

91 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.198/- ஆனது மொத்தம் 140 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதுவும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் உடனாக ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

 

ஏர்டெல் ரூ.349 (செல்லுபடி + நன்மைகள்)

இந்த பிரிவின்கீழ், பார்தி ஏர்டெல் ஆனது தற்போது இரண்டு திட்டங்களை தன்னிடம் கொண்டுள்ளது. அவைகள் ரூ.349/- மற்றும் ரூ.549/- ஆகும். 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.349/- ஆனது மொத்தம் 56ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது. இது நாள் ஒன்றுக்கு 2ஜிபி தரவு, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

 

ஏர்டெல் ரூ.549 (செல்லுபடி + நன்மைகள்)

அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.549/- ஆனது நாள் ஒன்றிற்கு 2.5ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

 

ஐடியா ரூ.357 (செல்லுபடி + நன்மைகள்)

ஐடியா செல்லுலாரை ;பொறுத்தமட்டில், அதன் ரூ.357/- ஆனது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மொத்தம் 28 நாட்கள் என்கிற அதன் செல்லுபடி காலத்தின்கீழ் 56ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும். உடன் வரம்பற்ற எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

 

ஐடியா ரூ.549 (செல்லுபடி + நன்மைகள்)

சில வட்டங்களில் மட்டுமே கிடைக்கும் ஐடியாவின் ரூ.549/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் அது நாள் ஒன்றிற்கு 2.5ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வோடபோன் திட்டங்கள்

வோடாபோன் இந்தியா ஆனது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் வழியை பின்பற்றி, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.348/-ஐ (வட்டத்திற்கு ஏற்ப விலை மாறுபடும்) வழங்கிவருகிறது. டேட்டா நன்மையை தவிர 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.