சிம் இல்லாமல் உலகம் முழுவதும் இன்டர்நெட் பயன்படுத்த ஆசையா வந்துவிட்டது கோல்கால்மீ

இப்போது வரும் புதிய தொழில்நுட்பம் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. அந்தவகையில் இந்த உலகத்தில் நாம் எங்கு சென்றாலும் சிம் இல்லமால் 4ஜி இன்டர்நெட் உபயோகம் செய்யமுடியும், அதற்கு கோல்கால்மீ என்ற சாதனம் வெளிவந்துள்ளது, இந்த சாதனம் பல்வேறு நாடுகளில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் தடையில்லா இன்டர்நெட் சேவையை வழங்க இந்த கோல்கால்மீ சாதனம் வெளிவந்துள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்கால்மீ சாதனம் பார்ப்பதற்கு ஸ்மார்ட்போன் போன்று இருக்கும், மேலும் இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய ஒரு யுஎஸ்பி கேபிள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் 5எஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த கோல்கால்மீ சாதனம். பின்பு இந்த சாதனத்தில் பவர் பட்டன், VOLUME BUTTON, போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

கோல்கால்மீ சாதனம் பொதுவாக 4-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறிய வடிவில் இந்த சாதனம்
வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று மிக அருமையாக பயன்படுத்த முடியும்.


லாகின்:

இந்த சாதனத்தை ஆன் செய்தவுடன் welcome 4ஜி என்று வரும், பின்பு இந்த சாதனத்தை வாங்கும் போது கண்டிப்பாக ஒரு லாகின் ஐடி மற்றும் பாஸ்வார்ட் கொடுக்கப்படும், அந்த கணக்கில் உங்களுக்கு தேவையான ரீசார்ஜ் திட்டத்தை தேர்வுசெய்ய முடியும்.

 

விர்ச்சுவல் சிம்:

இந்த சாதனத்தில் இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் வசதி கூட உள்ளது, இருந்தபோதிலும் நீங்கள் சிம் இல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்த விர்ச்சுவல் சிம்-எனும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும், பின்பு எளிமையான இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.

 

பவர்பேங்க்:

கோல்கால்மீ சாதனத்தில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சாதனத்தை பவர்பேங்க் போல பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டவர் பிரச்சனை :

இந்த சாதனத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் டவர் பிரச்சனை இல்லை, மேலும் இந்த உலகத்தில் நாம் எங்கு சென்றாலும் அதிவேக
4ஜி இன்டர்நெட் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விர்ச்சுவல் சிம்:

வருங்காலத்தில் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் விர்ச்சுவல் சிம் வசதி கண்டிப்பாக வரும், இந்த தொழில்நுட்பம் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.