அறிமுகம் ஜியோ ரூ 11 முதல் ஆட்-ஆன் பிளான்ஸ் ஆட்-ஆன் என்றால் என்ன

முதலில் இந்த திட்டங்கள் வழங்கும் டேட்டா அளவை பற்றிய விவரங்களை ஜியோ வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த அனைத்து திட்டங்களுமே ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் பயன்பாட்டில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ள திறந்துவிடப்பட்டப் பின்னர் டேட்டா நன்மைகள் பற்றிய தகவலை பெற முடிந்தது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சில நாட்களுக்கு முன்பு ஜியோபோனிற்கான ரூ.49/- திட்டத்தை சேர்க்காமல் மொத்தம் நான்கு புதிய ஆட்-ஆன் திட்டத்தை அறிவித்தது.

முதலில் இந்த திட்டங்கள் வழங்கும் டேட்டா அளவை பற்றிய விவரங்களை ஜியோ வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த அனைத்து திட்டங்களுமே ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் பயன்பாட்டில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ள திறந்துவிடப்பட்டப் பின்னர் டேட்டா நன்மைகள் பற்றிய தகவலை பெற முடிந்தது.

 

இந்த திட்டங்கள் அப்படியில்லை

நாம் இங்கு ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101/- ஆகிய திட்டங்களை பற்றி பேசுகிறோம் என்பதும், பொதுவாக ஆட்-ஆன் திட்டங்கள் வாய்ஸ் நன்மைகளை வழங்காமல், டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும். ஆனால் இந்த திட்டங்கள் அப்படியில்லை.

400எம்பி- 1ஜிபி

இந்த நான்கு திட்டங்களுமே கூடுதல் டேட்டா நன்மையுடன் வாய்ஸ் நன்மையையும் வழங்குகிறது. அதாவது ரூ.11/- என்கிற ஆட்-ஆன் ஆனது 400எம்பி அளவிலான தரவை வழங்க. மறுகையில் உள்ள ரூ.21/- ஆனது 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

3 ஜிபி - 6 ஜிபி

ரூ.51/- ஐ பொறுத்தமட்டில், 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்க, இறுதியாக ரூ.101/- என்கிற ஆட்-ஆன் திட்டமானது 6ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த அனைத்து திட்டங்களும் உங்களின் முதன்மை ரீசார்ஜின் செல்லுபடி காலம் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தரவு

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஜியோவின் ரூ.149/- என்கிற முதன்மை ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்துகிறீரகள் என்றால், நீங்கள் ரூ.101/- ஆட்-ஆன் திட்டடத்துடன் இணைந்தால் உங்களுக்கு ரூ.149/- கட்டணத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் 1.5ஜிபி/நாள் தரவு நன்மையுடன் சேர்த்து 6 ஜிபி அளவிலான கூடுதல் தரவு கிடைக்கும்.

பார்தி ஏர்டெல் 193/-

இதற்கு போட்டியாக, பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ரூ.193/- என்ற ப்ரீபெயிட் ஆட்-ஆன் பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் வரம்பற்ற காம்போ (வாய்ஸ்டேட்டா ) திட்டத்தின் மேல் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும்.