ஜியோவிற்கு மேலுமொரு அடி நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அறிவித்து வோடாபோன் அதிரடி

வோடபோனின் ரூ.549 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்பின்பு தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

வோடபோன் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி ஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகைகளை அறிவித்துள்ளது வோடபோன். மேலும் இப்போது அறிவித்துள்ள இந்த சலுகைகள் பொறுத்தவரை பல்வேறு வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.

மேலும் வோடபோனின் புதிய பிரீபெயிட் சலுகைகள் பொறுத்தவரை செய்யப்பட்ட வட்டாரங்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின்பு புதிய சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

தினமும் 3.5ஜிபி டேட்டா:

வோடபோனின் ரூ.549 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மொத்தம் 98 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமிங்:

வோடபோனின் ரூ.549 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்பின்பு தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

தினமும் 4.5 ஜிபி டேட்டா:

வோடபோனின் ரூ.799 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.5 ஜிபி 3ஜி /4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மொத்தம் 126 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் கால் அழைப்புகள்:

இந்த வோடபோனின் ரூ.799 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்கப்படும் புதிய சலுகையின் பலன்கள் சில வட்டாரங்களில் மாறலாம்.

ஜியோ:

ஜியோ வழங்கும் ரூ.549 மற்றும் ரூ.799 திட்டத்தின் முறையே 4ஜிபி டேட்டா மற்றும் 5ஜிபி டேட்டாவும், அதன்பின்பு அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் கால் அழைப்புகள் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டங்கள் 28 நாட்கள் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.