இந்த சிம் இருக்கா நீங்க தான் பவர்புல் நிலாவில் டவர் அமைக்க இருக்கும்தொலைதொடர்பு நிறுவனம்

ஏர்செல் என்ற சகாப்தத்தை முடித்து விட்டு அடுத்து மூன்று நிறுவனங்கள் ஜோடி போட்டு நிலாவில் டவர் அமைக்க இருகின்றன.

வெறும் 2 ஜி மட்டுமே வெகு காலமாக பார்த்து வந்த கண்கள் இந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கண்ணை மூடி திறப்பதற்குள்  5ஜியில் வந்து நிற்கிறது.

இன்னைக்கு தமிழகத்தில் பல கிராமங்களுக்கும் முதல் முதலில் தொலைப்பேசி சேவையை கொடுத்த ஏர்செல் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் நாங்கள் களத்தை விட்டே செல்கிறோம் என்று அறிவித்து விட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் பிரபல தொலைதொடர்பு நிறுவனமாக விளங்கி வரும் வோடபோன், நோக்கியா மற்றும் ஆடி ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து நிலாவில் தங்கள் சேவையை அளிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் நிலாவின் மேற்பரப்பை இங்கிருந்தே துல்லியமாக காட்டும் வகையில் ஒரு கருவியையும் தயாரித்து அனுப்ப உள்ளனர்.

இதற்கென்றே மிகவும் எடை குறைவாக பிரத்யேகமாக நோக்கியா நிறுவனத்தால் ஒரு சாதனம் தயாரிக்கப்படுகிறது.

வரும் 2019ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்  பால்கான் 9 ராக்கெட் மூலம் திட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வோடபோன் கூறியுள்ளது.