ஜியோவை விட அதிக டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 உடனே அமல் ஏர்டெல் ஷாக்

அரசு நடந்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் 'ஹோலி தமாகா' திட்டமான ரூ.399/-ஐ அறிமுகம் செய்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பித்து வைத்த காம்போ (டேட்டா+வாய்ஸ்) பாணியை, இந்த பிஎஸ்என்எல் திட்டமும் பின்பற்றுகிறது.

அரசு நடந்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் 'ஹோலி தமாகா' திட்டமான ரூ.399/-ஐ அறிமுகம் செய்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பித்து வைத்த காம்போ (டேட்டா+வாய்ஸ்) பாணியை, இந்த பிஎஸ்என்எல் திட்டமும் பின்பற்றுகிறது.

அதாவது இது வரம்பற்ற அழைப்பு, தரவு மற்றும் இன்னபிற நன்மைகளையும் வழங்குகிறது. அதென்ன.? மற்றும் இதன் செல்லுபடி காலம் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

இலவச ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு

பிஎஸ்என்எல் ரூ.399/- என்கிற 'ஹோலி தமாகா' திட்டமானது உள்ளூர் மற்றும் எஸ்டிடி, இலவச ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. உடன் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்கும்.

இன்று முதல் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது

30 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ள இந்த திட்டம் மார்ச் 1-ஆம் தேதி முதல் (அதாவது இன்று முதல் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது) பான் இந்தியா அடிப்படையில் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஜிபி

வரம்பற்ற அழைப்பு மற்றும் 30 ஜிபி தரவை ரூ.399/-க்கு வழங்கும் இந்த திட்டம் சந்தையில் கிடைக்கும் மிகசிறந்த போஸ்ட்பெயிட் திட்டங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் பார்தி ஏர்டெல் நிறுவனம் இதே விலை நிர்ணயத்தின் கீழ் 20ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399/- போஸ்ட்பெயிட்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399/- போஸ்ட்பெயிட் ஆனது வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் உள்வரும் ரோமிங் அழைப்புகளுடன் சேர்த்து மொத்தம் 20 ஜிபி தரவை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் அதன் பயனர்களுக்கு வின்க் ம்யூசிக் இலவச சந்தாவையும் பெறுகின்றனர்.

​​ஐடியாவின் ரூ.389/- நிர்வாணா

இந்த ஒப்பீட்டில், ​​ஐடியாவின் ரூ.389/- நிர்வாணா பட்ஜெட் திட்டமும் உள்நுழைகிறது. இது வரம்பற்ற உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் குரல் அழைப்புகளுடன் 20 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகின்றது.

3000 உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் எஸ்எம்எஸ்

உடன் ஐடியா மூவிஸ் & டி.வி, ஐடியா மியூசிக் மற்றும் ஐடியா கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவைகளுக்கான 12 மாத இலவச சந்தாவும் கிடைக்கும். இறுதியாக இந்த திட்டம் செல்லுபடியாகும் காலத்தில் இலவசமாக 3000 உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.409/-

மறுகையில் உள்ள பிரதான போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.409/- ஆனது வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் உட்பட 20ஜிபி அளவிலான டேட்டாவையும், ஜியோ பயன்பாடுகளுக்கான அணுக்களும், 100 உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

ரூ.500/- என்கிற பாதுகாப்பு வைப்பு நிதி

இந்த ரூ.409/- திட்டத்தை பெற ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.500/- என்கிற பாதுகாப்பு வைப்பு நிதியை வழங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.