கிளம்பி இருக்கும் புது பிரச்சனை இனி எல்லோரும் மொத்தமா லேண்ட் லைனிற்கு மாற வேண்டியது தான்

கடந்த சில நாட்களாகவே, ஏர்செல் நெட் வொர்க் வைத்திருந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், மிகப் பெரிய சோதனை நாட்களாகவே இருந்தன. திடீர் திடீரென்று லைன் கட்டாகி விடும். டவரே கிடைக்காது.  முடங்கிய சிக்னலால், அதை உபயோகிப்போர் அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர்.

சிம் தான் வேலை செய்யவில்லையோ என்று, சிம்மை வேறு ஃபோனுக்கு மாற்றியவர்களின் எண்ணில் உள்ள பேலன்ஸ் தொகை அனைத்தும் பூஜ்யம் ஆனது. இவையெல்லாம் பிரீபெய்டு கட்டணங்கள்.

மக்கள் தகவல் தொடர்பிற்கு மிகவும் சிரமப்பட்டுப் போனார்கள். ஆனால், இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பிறகும் ஏர்செல் நிறுவனம் இது பற்றி வாயைத் திறக்கவேயில்லை.

பிறகு, ஒரு வழியாக, எல்லாம் சரியாகி விடும். நெட் ஒர்க் பிராப்ளம் என்று சொன்னார்கள். அதன் படி, சில தினங்களில் நெட் ஒர்க் சரியானது. ஆனால், இப்போது தடாலடியாக, பிப்ரவரி 28-வரை தான் ஏர்செல் சேவை இயங்கும். மார்ச் 1 முதல் இயங்காது என அறிவித்தது.

இதற்கிடையே, நெட் ஒர்க் பிராப்ளத்தினால்,கணிசமான அளவில் பலர் ஜியோவிற்கு மாறினார்கள். ஏர்செல் நிறுவனம் இன்று மஞ்சள் கடுதாசி எனப்படும், கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையை, வெட்ட வெளிச்சமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

டிராய் அமைப்பின் உத்தரவுப்படி, ஏப்ரல் 15-க்குள், ஏர்செல் நெட்ஒர்க் சேவையை, வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பிய நிறுவன நெட் ஒர்க்கிற்கு மாறிக் கொள்ளலாம், என அறிவித்த நிலையில், ஏர்செல் சுத்தமாக ஒர்க் ஆகவில்லை. மாற்றாக வாங்கிய ஜியோவும் கடந்த சில நாட்களாக ஒர்க் ஆகவில்லை.

ஜியோவிலும் கடந்த சில நாட்களாக, எந்த ஃபோன் காலும் பேச முடியவில்லை. இன்டர்நெட், மற்றும் வாட்ஸ் அப் தான் செயல் படுகிறது. இதனால், ஜியோவிற்கு மாறியவா்கள் எல்லாம், மீண்டும் ஏதாவது ஒரு நெட் ஒர்க்கிற்கு மாற முடிவு செய்துள்ளார்கள்.

செல்போனின் முக்கிய செயல்பாடே, உடனுக்குடன் பேசுவது தான். இந்த அடிப்படை வசதியில், ஜியோ ஃபோனின் செயல்பாடு, மிக மந்தமாக இருக்கிறது.

இப்படியே நிலைமை போனால், வெகு விரைவில் மீண்டும் லேண்ட் லைனை அதிகமாக உபயோகிக்கும் நிலை வரும், ஒரு ரூபாய் ஃபோன் பூத்துகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து விடும் போல, என்று வாடிக்கையாளர்கள் நொந்து போய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.