ஏர்செல் மட்டுமில்லை மொத்தம் 8 நிறுவனங்களின் கதை முடிந்தது ஜியோதான் காரணமா

சென்னை: ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15ல் இருந்து செயல்படாது என்று டிராய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரிக்கை வைத்து இருந்தது..

இழப்பும் கடனும் அதிகமாக இருப்பதால் இப்படி அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரியுள்ளது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த வாரம் சில நாட்கள் பலர்க்கும் எடுக்கவில்லை. ஏர்செல்லின் பிரச்சனைக்கு ஜியோதான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது.

மொத்தம் 12

2016 செப்டம்பர் மாதம் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கும் என்று கணிக்கப்பட்டது. அந்த வகையில் ஜியோ நிறுவனம் வந்த போது சிறிது, பெரிது என மொத்தம் 12 மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தது. இதில் இப்போது 4 நிறுவனங்கள் மட்டுமே இருக்கிறது.

என்ன நடந்தது

இதில் ஏர்டெல், பிஎஸ்என்எல் நல்ல நிலையில் இருக்கிறது. வோடாபோன், ஐடியா இணைக்கப்பட்ட ஒரே பெயரில் செயல்பட உள்ளது. மீதம் இருப்பது ஜியோ மட்டும்தான். மற்ற நிறுவனங்கள் எல்லாம் அதிகாரபூர்வமற்ற நிலையில் செயல்பாட்டை நிறுத்தி இருக்கிறது.

நஷ்டம்

அதேபோல் ஏர்செல் நிறுவனம் 1 வருடமாக மோசமான நஷ்டத்தில் இயங்கி இருக்கிறது. பல வாடிக்கையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தும் இருக்கிறது. அதேபோல் சிக்னல் வழங்கும் நிறுவனங்களும் ஏர்செல்லுடன் பிரச்சனை செய்து இருக்கிறது.

தயார் கிடையாது

இதனால் ஏர்செல்லில் அதிக பங்கு வைத்து இருக்கும் தலைமை நிறுவனமான மலேசியாவின் மேக்சிஸ் டெலிகாம் கோபம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுப்பதை நிறுத்தி இருக்கிறார்கள். 15,500 கோடி வரை தற்போது அவர்களுக்கு கடன் இருக்கிறது.

மறைமுக காரணம்

இதுகுறித்து ஏர்செல் அனுப்பி உள்ள திவால் விண்ணப்பத்தில் ''எங்களால் மார்க்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. புதிய நிறுவனம் ஒன்றின் வருகையால் நாங்கள் நஷ்டம் அடைந்து இருக்கிறோம்'' என்று ஜியோ பெயரை பற்றி சொல்லாமல் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறது.