வாட்ஸ்அப்புக்கு போட்டியாக வந்தாச்சு டோட்டல் நெட்டே இல்லாமல் மெசேஜ் அனுப்பலாம்

சென்னை: வாட்ஸ்அப்புக்கு போட்டியாக டோட்டல் என்ற பெயரிலான ஆண்ட்ராய்டு, ஆப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இணையதள சேவை இல்லாலேயே இதில் மெசேஜ்களை பரிமாறிக்கொள்ளலாம். கட்டணங்களை செலுத்தலாம்.

ஹைக் மெசேஞ்சர் என்ற உடனடி மெசேஜ்சர் இதை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்புக்கு போட்டியாக இது உருவாகும் என்பது அந்த நிறுவன கணிப்பு.

தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகியவை மிகுந்த, வரவேற்பை பெற்ற மெசேஜ் ஆப்புகளாக உள்ளன.

தகவல்கள் 
நிறுவனம் அறிக்கை

இதனிடையே, ஹைக் மெசேஞ்சர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான கவின் மிட்டல் வெளியிட்ட அறிக்கையில் மேலதிக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

கிரிக்கெட் போட்டி 
பணம் செலுத்தலாம்

கிரிக்கெட் போட்டி அப்டேட் உள்ளிட்ட பல தகவல்களை இதில் பெறலாம். பணம் செலுத்த முடியும். ஆனால் இணையதள வசதி இல்லாமலேயே இதை செய்ய முடியும் என்பதுதான் இதில் சிறப்பு. இந்திய மார்க்கெட்டை ஆய்வு செய்தால், 400 மில்லியன் ஸ்மார்ட் போன் பயனாளிகளில், 200 மில்லியன்பேர்தான் தினசரி ஆன்லைனுக்கு வருகிறார்கள்.


ஒப்பந்தம் 
செல்போன் நிறுவனங்கள்

ரூ.2000ம் விலைக்குள் அறிமுகமாகும், இன்டெக்ஸ் மற்றும் கார்பன் செல்போன்களுடன் டோட்டல் ஒப்பந்தம் செய்துள்ளது. மார்ச் மாதம் முதல் இந்த வகை போன்களில் டோட்டல் ஆப்பும் இணைந்தே வரும்.

கம்மி டேட்டா 
டேட்டா குறைவு

டோட்டல் ஆப், 1எம்பிக்கும் குறைவான 'லைட்வெய்ட்'டாகும். ரயில்வே டிக்கெட் அப்டேட்டுகளையும் இதில் பார்க்க முடியும். செல்போன் எண்ணை வைத்து இன்னும் பல சேவைகளையும் இதில் பெற முடியும். படங்களை நண்பர்களுக்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

22ம் தேதி காதலரை திருமணம் செய்யும் நடிகை பாவனா ஆனால் அழைப்பு