2018 ஆண்டின் முதல் பலி வாட்ஸ்அப் அம்பலப்படுத்திய ஆய்வுகள் இனியும் இயக்கத்தை தொடர முடியுமா

இன்றைக்கு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உலக மக்களை வாட்ஸ் அப் தன்னுள் அடக்கி கொண்டது.

பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் என்ற இருவர் இணைந்து கண்டுபிடித்ததுதான் இந்த அப்ளிகேஷன். இவர்கள் இருவரும் பிரபல யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்.

ஸ்மார்ட் போன் உலகமாக மாறிவரும் இச்சூழலில் இந்த அப்ளிகேஷனின்றி எந்த ஒரு ஸ்மார்ட் போனும் இருக்காது என்ற அளவிற்கு இதனுடைய வளர்ச்சியும், பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

ஆனால் எந்த அளவிற்கு அதே அளவிற்கு பாதுகாப்பு முரண்பாடுகளும் வாட்ஸ்அப்பில் நிகழ்கிறது.

வாட்ஸ்அப்பில் உள்ள குரூப்களில் ஹேக்கிங் முறையில் நுழைந்து தகவல்களைத் திருட முடியும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அனைத்து தரப்பினரிடமும் பெருமளவில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப்பில், குரூப்களின் அட்மின்தான் புதிய நபர்களை இணைக்க முடியும்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரில் நடந்த ஒரு கருத்தரங்கில் வாட்ஸ்அப் குரூப் பாதுகாப்பு குறித்து உரையாடப்பட்டது.

அப்போது, ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், வாட்ஸ்அப் குரூப்களில், சில ஹேக்கிங் முறைகளை பயன்படுத்தி அட்மின்களுக்குத் தெரியாமல் நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குரூப்பில் இருக்க முடியும் என்றும், வாட்ஸ்அப் பில் உள்ள குறைபாடுகளால் இது சாத்தியம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தை கவனமாக கண்காணித்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனி தோஷம் போக்கி சந்தோஷம் தரும் போகி