உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை ஒரு நொடியில் இணைக்கலாம் இதோ எளிய வழிமுறை

ஆரம்பத்தில் காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு காஸ், செல்போன் என்று அனைத்திலும் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

செல்போன் என்னுடன் டிசம்பர் 31 தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்., அந்த கால கெடுவை மார்ச் மாதம் இறுதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அதன்படி, '14546' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை செல்போனில் இருந்து அழைத்தால், பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும். 

அதில், உங்களுடைய விருப்ப மொழியை தேர்வு செய்து உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். 

அது, உடனடியாக தனித்துவ அடையாள எண் ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு அனுப்பப்படும். அது தகவல்களை உறுதி செய்ததும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' உங்களின் செல் போனுக்கு வரும்.

அந்த எண்ணை உடனே, 'டைப்' செய்து அனுப்பிய பின், இணைப்பை துண்டிக்கலாம். அடுத்த நிமிடத்தில், உங்கள் எண், ஆதாருடன் இணைத்ததை உறுதி செய்து SMS செய்தி வரும். இதை செய்ய சில நிமிடங்கள் போதும். 

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால்.., ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்குத்தான் அந்த 'ஒன் டைம் பாஸ்வேர்டு' செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி தமிழனுக்கே எங்கள் நாட்டில் தலைமைபேறு இனி தமிழனுக்கே எங்கள் நாட்டில் தலைமைபேறு