2017ல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய வார்த்தை இதுவா

டெல்லி: ஒவ்வொரு வருடமும் கூகுள் அந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை வெளியிடும். உலகம் முழுக்க அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 'மேகன் மார்கள்' என்ற அமெரிக்க நடிகை இடம்பெற்று இருக்கிறார். அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஐபோன் 8 இடம்பெற்று இருக்கிறது.

இந்த லிஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி ஆச்சர்யமாக 9வது இடத்தில் இருக்கிறது. தற்போது இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எது என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் வித்தியாசமாக இந்த முறை சில விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது. சென்ற வருடம் இதில் 'போகி மான் கோ' என்று வீடியோ கேம் முதல் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்திரிநாத் கி துல்ஹனியா 
பாலிவுட் படம்

கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 6 வது இடத்தில் இருக்கிறது 'பத்திரிநாத் கி துல்ஹனியா' பாலிவுட் படம். அலியாபட், வருண் தவான் இணைந்து நடித்த இந்த படம் இந்தியில் மாஸ் ஹிட்டானது. 80களில் பாலிவுட்டில் வந்த 'தம்மா தம்மா' என்ற பாடல் இந்த படத்தில் ரீமேக் செய்யப்பட்டு இடம்பெற்று இருந்தது. இந்த பாடலை கேட்பதற்காகவே பலர் இந்த படம் குறித்து கூகுளில் தேடி இருக்கிறார்கள்.

 

ஹால்ப் கேர்ள்பிரண்ட் 
மீண்டும் பாலிவுட்

கூகுள் தேடலின் நான்காவது இடத்தில் இன்னொரு பாலிவுட் படம் இருக்கிறது. சேட்டன் பகத் எழுதிய புத்தகத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட 'ஹால்ப் கேர்ள்பிரண்ட்' என்ற படம்தான் 4 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் 100 கோடி வசூலை தாண்டி இன்னும் சில இடங்களில் ஓடிக் கொண்டு இருக்கிறது. சேட்டன் பகத்தின் புத்தக பிரியர்கள் இதையும் விடாமல் பார்த்து ஹிட் அடிக்க வைத்தார்கள். சிலர் இந்தபடம் குறித்து மோசமாகவும் விமர்சனம் வைத்து இருந்தனர்.

 

4வது இடம் 
டங்கல் டங்கல்

கூகுள் தேடலில் 4 வது இடத்திலும் பாலிவுட் படம் ஒன்றுதான் இடம்பிடித்து இருக்கிறது. இந்த வருடத்தின் மெகாஹிட் படங்களில் ஒன்றான டங்கல் படம் தான் 4 வது இடத்தில் இருக்கிறது. அமீர்கான் நடித்த மல்யுத்த படமான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இன்னும் கூட விடாமல் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

 

ஸ்கோர் என்ன 
ரன் என்ன கூகுள்

எப்போதும் போல இந்த வருடமும் கிரிக்கெட் குறித்த கேள்விகள் கூகுள் தேடலில் அதிகம் வந்துவிட்டது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையில் 'லைவ் கிரிக்கெட் ஸ்கோர்' மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு நிறைய கிரிக்கெட் போட்டிகள் இந்த வருடம் நடந்ததால் இந்த கேள்வி கூகுளில் அதிகம் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் கிரிக்கெட் சம்பந்தமாக இன்னும் சில கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் நம்மக்கள் கேட்டு இருக்கிறார்கள்.

 

இரண்டாவது இடம் 
ஐபிஎல்

ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து தவறாமல் இது கூகுள் சர்ச்சில் இடம்பிடித்துவிடுகிறது. அதன்படி 'இந்தியன் பிரிமியர் லீக்' என்று வார்த்தைதான் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்த வருடம் நடந்த ஐபிஎல் 2017 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி அடைந்தது. இது மும்பையின் மூன்றாவது சாம்பியன்ஷிப் ஆகும்.

 

முதல் இடம் 
நம்பர் 1

கூகுளில் இந்த வருடம் முதல் இடம் பிடித்த கேள்வியை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இந்த வருடம் இந்தியாவே இந்த ஒரு படம் குறித்துதான் பேசிக் கொண்டு இருந்தது. 2017ன் பிளாக்பஸ்டர் படமான பாகுபலி 2 தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை ஆகும். பல முக்கியமான விஷயங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த வருடம் ராஜ கம்பீரமாக முதல் இடத்தில் பதவியேற்று இருக்கிறது பாகுபலி 2 !