யூடியூப்பின் அதிரடி: இனி இப்படியான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது

உலகின் முன்னணி வீடியோ பதிவேற்றும் தளமாக தொடர்ந்தும் யூடியூப் முன்னணியில் திகழ்கின்றது.

இதில் சில வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தணிக்கை செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இவ்வாறான நிலையில் மற்றுமொரு வகை வீடியோவை பதிவேற்றம் செய்வதை தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது துப்பாக்கிகளை வடிவமைக்கும் வீடியோ பதிவுகளை முற்றாக தடை செய்துள்ளது.

அண்மையில் Las Vegas பகுதியில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து இந்த முடிவினை யூடியூப் நிர்வாகம் எடுத்துள்ளது.

இதுவரை காலமும் யூடியூப் ஊடாக துப்பாக்கிகளின் செயற்பாடு மற்றும் அவை உருவாக்கப்படுவது தொடர்பான வீடியோக்களை பார்க்கும் வசதி தரப்பட்டிருந்தது.

ஆனால் பழைய வீடியோக்களையும் தனது தளத்திலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ள அதேவேளை பயனர்களுக்கான வரையறையிலும் (Policy) மாற்றம் கொண்டு வரவுள்ளது.

என்னை கேவலப்படுத்துவதாக நினைத்து அஜித் சாரை அசிங்கப்படுத்த வேண்டாம்..! ஜூலி வேண்டுகோள்…!!