அனைவரையும் கவர்ந்த பேஸ் புக்கின் புதிய சேவை தெரியுமா?

சமூகவலைத்தள ஜாம்பவான் ஆன பேஸ்புக் பல்வேறு சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதில் அடுத்தவர்களுக்கு உதவும் சேவைகளும் உள்ளடங்கும்.

இவ்வாறான சேவைகளுள் ஒன்றுதான் குருதிக்கொடை சேவையாகும்.

விசேட பேஸ்புக் பதிவின் ஊடாக இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு இரத்தத்தினை பெற்றுக்கொடுக்க முடியும்.

அதிலும் இரத்தம் தேவைப்படுபவர் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் உள்ளவர்களிடமிருந்து இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தேசிய குருதிக்கொடை தினமாக இந்தியா அறிவித்துள்ளது.

இதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது இச் சேவை வைரலாகி வருகின்றது.

இரத்தம் தேவைப்படுபவர்கள் ஒத்த இரத்தத்தினை கொண்டவர்களை பேஸ்புக்கின் ஊடாக கண்டுபிடித்து தொலைபேசி அழைப்பு, வாட்ஸ் ஆப் மற்றும் மெசஞ்சர் ஊடாக தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

 

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்