ஜியோ போனை வாங்கிறவங்க மட்டும் இதை படிங்க.!

நாடு முழுவதும் ஜியோ நெட்வொர்க் வந்தவுடன் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் அதிர்ச்சியில் உறைந்தது.

ஜியோவில், கால்கள், இணையம் மற்றும் மெசேஜ்கள் என எண்ணற்ற சேவைகள் இலவசமாக கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களை வெகுவாக இந்த நிறுவனம் கவர்ந்தது.

மேலும், புதியதாக ரூ.1500க்கு ஜியோ போனை அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த இலவச போனை பெற முன்பணமாக 1,500 ரூபாய் செலுத்த வேண்டும்.

3 ஆண்டுகள் கழித்து போனை திருப்பித் தரும் போது வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனால் 6 கோடிக்கு மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். அதன்படி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போன் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜியோ போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

போனை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பயன்படுத்துவதற்காக வருடம் முழுவதும் 1,500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதாவது 3 ஆண்டுகளுக்கு 4,500 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அப்படி தங்களுக்கு பயன்படுத்த விருப்பமில்லாமல் திருப்பி தர விரும்பினால், வாடிக்கையாளர்களிடம் இருந்து 1,500 ரூபாயுடன் ஜி.எஸ்.டி மற்றும் மற்ற வரிகளும் சேர்த்து வசூலிக்கப்படும்.

அல்லது 2ம் ஆண்டில் திருப்பி அனுப்பினால், வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாயுடன் ஜி.எஸ்.டி. மற்றும் மற்ற வரிகளும் வசூலிக்கப்படும்.

இதே போன்று 3ம் ஆண்டு முடிவதற்குள் திருப்பித் தரும் வாடிக்கையாளர்கள் 500 ரூபாயுடன் வரிகளையும் சேர்த்து செலுத்த வேண்டும்.

இந்த விதிமுறைகளை ஜியோ போன் அறிமுகம் விழாவில் முகேஷ் அம்பானி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்