நீட்டா அம்பானியின் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு?

நீட்டா அம்பானி அவர்கள் ரூ.315 கோடி மதிப்பில் ஐபோன் 6 பிங்க் என்ற செல்போனை பயன்படுத்துகிறார் என இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 48.5 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த ஐபோன் 6 பிங்க் செல்போனை வாங்கியுள்ளார்.

அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பிளாக்பெர்ரி மாடல்களை பயன்படுத்தி வருகின்றனர், அதேசமயம் நீட்டா அம்பானி அவர்கள் மட்டும் ஐபோன் 6 பிங்க் என்ற செல்போனை பயன்படுத்துகிறார்.

இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் பொறுத்தவரை 24 கேரட் தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் உடைக்க முடியாத வண்ணம் இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் உள்ளது.

இந்த மொபைல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களோடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற செல்போனை நீட்டா அம்பானி அவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என இணையத்தில் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதன்பின் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு ஆர்டரின் பேரில் மட்டுமே கிடைக்கும் வகையில் உள்ளது.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்