இன்றுவரை உண்மையென்று நாம் நம்பும் 9 அப்பட்டமான பொய்கள்.!

பரிணாம வளர்ச்சி என்பது தாழ்வான ஒரு நிலையில் இருந்து மேல்நோக்கி அழைத்து செல்லும் ஒரு வளர்ச்சி என்று பலரும் நம்பிக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் வளர்ச்சி என்பது சுற்றுப்புறசூழலை பொருத்ததே தவிர. பரிணாமத்தை பொருத்தது அல்ல. ஆக, மனிதர்களுக்கும் இறக்கை முளைக்கும், பல நூற்றாண்டு காலம் கழித்து பரிணாம வளர்ச்சியின் காரணத்தினால் நாமெல்லாம் பறப்போம் என்று யாரேனும் நம்பிக் கொண்டிருந்தால் - ஐ யம் வெரி சாரி.!

விண்வெளியில் மூச்சைப்பிடித்துக் கொண்டு மனிதன் உலாவலாம் என்று பலரும் நம்புகிறார்கள். அது கிட்டத்தட்ட உண்மைதான். ஆனால் அது வெறும் 15 - 30 நொடிகள் வரை மட்டும் தான் சாத்தியமாகும்.

விண்வெளியில் பிராண வாயு உதவியின்றி, மூச்சைஇழுத்துபிடித்து தாக்குப்பிடிக்கும் முதல் 15 அல்லது அதற்கு மேற்பட்ட நொடிகளுக்குள் மயக்கம் முதல் மரணம் வரை நிகழலாம் என்பதே உண்மை. ஆக, பூமி கிரகத்தில் தண்ணீருக்கு அடியில் பல மணித்துளிகள் மூச்சுப்பிடிக்கும் திறன் கொண்டவர்களை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு குட் பை.!

வட துருவத்தில் பொலரிஸ் (Polaris) தான் மிகப் பிரகாசமான நட்சத்திரம் என்றும் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது பார்க்க மட்டும் தான் அப்படி, உண்மையில் ஸிரியஸ் (Sirius) நட்சத்திரம் தான் வட துருவத்தில் மிகவும் பிரகாசமான நட்சத்திரமாகும்.

இதில் மற்றொரு உண்மை என்னவெனில், பூமியில் இருந்து நட்சத்திரங்களைப் பார்க்கும்போது நீங்கள் கடந்த காலத்தை தான் பார்க்கிறீர்கள். அதாவது இரவில் நீங்கள் பார்க்கும் பல நட்சத்திரங்கள் ஏற்கனவே இறந்துவிட்டன. இதற்கு தொலைவு மிகப்பெரிய காரணமாக திகழ்கிறது. இந்நிலைப்பாட்டில், இது தான் பிரகாசமான நட்சத்திரம் என்று முடிவு செய்வது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்.

தரையில் விழுந்த உணவை 5 நொடிக்குள் எடுத்து விட்டால் அது உண்ண தகுந்ததென்றும் அல்லது அதில் கிருமிகள் ஏறிக்கொள்ளும் என்று ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை உண்டு, அது உண்மையல்ல. தரையில் விழுந்த ஒரு உணவு பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பில்லாதது என்பது தரையின் சுத்ததை பொருத்ததேயின்றி எடுக்கும் நேரத்தை பொருத்தது அல்ல.

பெரும்பாலானோர்கள் இன்று வரை நிலவிற்கு முதுகு பக்கம் (டார்க் சைட் ஆஃப் தி மூன்) உண்டு என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி ஒன்றுமில்லை என்பது தான் நிதர்சனம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சில சமயங்களில், அதிகப்படியான சூரிய ஒளியானது நிலவை முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதே உண்மை என்கிறார்கள் வானவியல் ஆய்வாளர்கள்.

மூளையுள் உள்ள செல்கள் இறந்தால் இறந்தது தான், அது மறு உற்பத்தியாகாது என்று பலரும் நம்புகின்றனர், அது வெறும் கட்டுக்கதை. உண்மை என்னவென்றால், மனித மூளையின் கற்றல் மற்றும் நினைவு சார்ந்த செல்கள் உற்பத்தி ஆகிக்கொண்டே தான் இருக்கும்.

உலகின் வளிமண்டலத்திற்க்குள் நுழையும் விண்கற்கள் தீப்பிடித்து எரியக் காரணம் - உராய்வு வெப்பம் தான என்று ஒரு நம்பிக்கை உண்டு, அது பொய். இன்னும் சொல்லப்போனால் விண்கற்கள் மிகவும் குளுமையானவைகள் ஆகும். அதன் மேல் பனித்துளிகள் கூட இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்