பேஸ்புக்: உலகளவில் இந்த நாடு தான் டாப்

உலகளவில் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர், இதுவரையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் இருந்து வந்தது.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளது.

எனினும் இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிடும் போது பேஸ்புக் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைவு தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்