5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது சாம்சங்.!

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் 5ஜி எனப்படும் 5-ம் தலைமுறை செல்போன்கள்

விற்பனையை தென்கொரியாவில் தொடங்கியுள்ளன.

குறிப்பாக 3 பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்து இந்த 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சாம்சங் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல்

போன்கள் விற்பனையை தொடங்கி உள்ளது.

கேலக்ஸி எஸ்10 5ஜி

தலைநகர் சியோலில் உள்ள சாம்சங் நிறுவன விற்பனை மையத்தின் முன் அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். கேலக்ஸி எஸ்10 5ஜி என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த போனில் 4 பின்புற கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளன.

 

25 முதல் 30 விழுக்காடு வரை அதிகம்

பின்பு இந்திய மதிப்பில் சுமார் 85ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எஸ்10 மொபைல் போன்கள் 4ஜி போன்களை விட 25 முதல் 30 விழுக்காடு வரை அதிகம் என்று வாடிக்கையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

 

கேலக்ஸி ஏ20இ

மேலும் இந்நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ20இ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளது. இப்போது கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ20இ, ஸ்மார்ட்போன் மாடல் 5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேட்டரி

கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி 
செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மேலும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி, கைரேகை சென்சார், இணைப்பு ஆதரவு வசதிகளை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்