அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 4ஜி டேட்டா சலுகையை 6மாதங்களுக்கு வழங்கும் ஜியோ.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி கடந்த வாரம் மான்சூன் ஹங்கமா என்ற சலுகையல் ஜியோபோனை ரூ.501-விலையில் விற்பனை செய்தது ஜியோ நிறுவனம். மேலும் இந்த ஜியோபோனை ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜியோ நிறுவனம் மற்றொரு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது அது என்னவென்றால், ரூ.594- ரீசார்ஜ் திட்டத்தில் 6மாதங்களுக்கு இலவச கால் அழைப்புகள், 4ஜி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்ததிட்டத்ததை ஜியோபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.594- ரீசார்ஜ் திட்டம்:

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.594-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 500எம்பி வரை 4 ஜி டேட்டா பயன்படுத்த முடியும், குறிப்பாக ஆறு மாதங்களுக்கு மொத்தம் 84ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும், இதனுடன் இலவச வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.501 விலையில்

உங்களது பழைய மொபைல்போளை கொடுத்து இந்த புதிய ஜியோபோனை ரூ.501 விலையில் வாங்க முடியும் என்று ஏற்கனவே ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற குறிப்பிட்ட செயலிகளை இந்த ஜியோபோனில் பயன்படுத்த முடியும்.

 

டிஸ்பிளே :

ஜியோ நிறுவனம் சில நாட்களுக்க முன்பு அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனம் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் 
கொண்டுள்ளது, அதன்பின்பு வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

 

சேமிப்பு:

ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 

பேட்டரி:

இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.