மொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்தவது எப்படி

இப்போதுவரும் ஸ்மார்ட்போன்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, இவை நமக்கு அதிக உதவியாய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருக்கும் லேப்டாப்பை மிக எளிமையாக கட்டுப்படுத்த முடியும். குறிப்பிட்ட ஆப்ஸ்-அம்சங்கள் மூலம் இவற்றை மிக எளிமையாக செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்த இரண்டு முக்கிய அம்சம் தேவை, அவை கண்டிப்பாக இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும், அதன்பின்பு உங்கள் லேப்டாப் கட்டயாகமாக ஆன்-செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்கள் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களில் அந்த குறிப்பிட்ட ஆப் வசதி இருக்க வேண்டும். இப்போது மொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்ப்போம்.

வழிமுறை-1:

முதலில் க்ரோம் பிரவுசரை தேர்வுசெய்து வெப் ஸ்டோர் (web store)-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

 

வழிமுறை-2:

அடுத்து வெப் ஸ்டோர் (web store)- பகுதியில் க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் (chrome remote desktop)-என டைப் செய்ய வேண்டும், பின்பு க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் -ஆப்ஸ் பகுதியை உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 

வழிமுறை-3:

இதே க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் ஆப்ஸை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 

வழிமுறை-4:

அடுத்து உங்கள் லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்த க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் ஆப்ஸை திறந்து -access your own computer from anywhere-என்பதை கிளிக் செய்ய வேண்டும், பின்பு அவற்றில் நீங்கள் பாதுகாப்பான பின் நம்பரை அமைக்க வேண்டும். இந்த பின் நம்பர் மூலம் தான் மொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்த முடியும்.

 

வழிமுறை-5:

அதன்பின்பு நீங்கள் லேப்டாப்பில் கொடுத்த பின் நம்பரை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கொடுக்க வேண்டும். பின்பு எளிமையாக உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் லேப்டாப்பை கட்டுப்படுத்த முடியும்.